பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

45

உயிரையே மறுக்கும் நீங்கள், ஒழுக்க உயர்வுப் பற்றிப் பேசுவதில்

என்ன பயன்?

தலைவரைப் பற்றிய நிலை இது. உலகைப் பற்றிய உங்கள் கருத்து யாதோ?

குண்டலகேசி: பேருலகு (அண்டம்) ஐங்கந்தங்கள் (ஸ்கந்தங்கள்) ஆகிய மூலப் பொருள்களாலானது. இம் மூலப் பொருள்கள் கணத்திற் றோன்றி மறைவன; உலகும் அதனைப் போன்றே கணத் தோற்றமாகி பொய்ம்மை நிலை (உறுதியற்றுக் கணந்தோறும் மாறும் நிலை) உடையது.

நீலகேசி: ஆம். இதுவே உங்கள் கண கழிவுவாதம் (க்ஷணபங்கவாதம்) இதன்படி மூலப்பொருள்களுள் ஒவ் வொன்றும் மறு பொருள் தோன்றுவதன் முன் இறந்து படுகின்றது என்று கொள்கிறீர்கள். ஒரு நிகழ்ச்சி அதன் முன்னைய நிகழ்ச்சிகளுடன் எத்தகைய தொடர்பு மற்ற தாகிறது. இதனை நீங்கள் நிகழ்ச்சிப் பொய்ம்மை வாதம் (அசத் காரியவாதம்) என்று கூறுகிறீர்கள். எனவே, நிகழ்ச்சிகளிடையே காரண காரியத் தொடர்புக்கு வழியில்லை. அப்படியானால், வான் மலர் (ஆகாசபுஷ்பம்) போன்ற இன்மை நிகழ்ச்சி ஏற்பட தடையில்லையல்லவா? காரண காரியத் தொடர்புக்கு இணைப் பாகப் பற்றுத் தொடர்பு (வாசனை) என்ற தத்துவம் கொள்ளப் படின்,நிகழ்ச்சிகளிடையே ஒருவகை தொடர்பு ஒப்புக் கொள்ளப் பட்டுவிடும். கண கழிவு வாதமும், இன்மை வாதமும் இதனுடன் பொருந்தாது.

தத்துவ விளக்கம் கிடக்கட்டும். புத்தர் அருங்குணங் களை விளக்கும் போதிசத்துவர் (புத்த பாம் பிறவிகள்) கதைகளில் அவர் தம்மிடம் வந்து கேட்பவர்க்குத் தம் தலையும் கண்ணும் ஊனும் குருதியும் மக்களும் முதற்கொண்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பொருளைக் கொடுப்பவர் கொடையின் உயர்வு பெறுபவர்க்கு அவை பயன்படும் அளவே யாகும். தலை வேண்டியவர் தலையில்லாது முண்டமாகச் சென்றனரா? இது பொருளற்ற பொருந்தாக் கூற்றாயிற்றே!

இக்கொடைச் செயல்கள், இந்திரனால் போதிசத்துவர் சோதனைக்குட்பட்ட காலை எழுந்தன என்கிறீர்களா?