பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 28

நிறைவுடைய போதிசத்துவருக்குச் சோதனை ஏன்? தேவ னாகிய இந்திரனுக்கு அவர் நிறைவை அறிய முடியாதா?

இவை எதற்கும் விடை பகர முடியாது குண்டல கேசி விழிக்கவே, அவள் அரசனால் அவமதிப்புடன் அனுப்பப் பட்டாள். நீலகேசி அனைவராலும் புகழப்பெற்றாள். பின், குண்டலகேசியின் ஆசிரியரான அர்த்த சந்திரனைத் தேடிச் சென்றாள்.

பிரிவு(3) அர்க்கசந்திர வாதம்

அர்த்த சந்திரன் உச்சயினி நகரில் வாழ்ந்தான். அவன் சொற் போரில் புலி எனக் கருதப்பட்டான். நீலகேசி அவனை அடைந்து வாது தொடங்கினாள். வாதப்பொருள் புத்தர் வினயபிடகத்திற் கண்ட ஒழுக்க முறை பற்றியதாயிருந்தது. புத்த சமயக் கொள்கைகளுக்கும், புத்த சமயத்தைப் பின்பற்றியவர்கள் மேற்கொள்ளும் நடைமுறைக்கும், இடையிலுள்ள பெருத்த வேற்றுமையை நீலகேசி எடுத்துக் காட்டினாள். கொள்கைகளுள் சில நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்கவையாகக் கூட இல்லை. புத்தர் பிறப்புக் கதைகள் (ஜாதகக் கதைகள்) பலவற்றில் போதிசத்துவர் தம் மனைவியையும் மக்களையும் கூட இரவலருக்குக் கொடுத்திருக்கிறார். இதிலிருந்து இரவலர் கேட்டதை யெல்லாம் கொடுப்பதே உயர் நெறி என்று கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் தெளிந்த அறிவுடைய எந்தப் புத்தரும், இன்று இக்கொள்கையைப் பின் பற்றித் தம் மனைவியை ஆண்டி ஒருவன் கேட்டால், கொடுப்பான் என்று எதிர்பார்க்க முடியாது.

அடுத்த படியாகப் புத்த சங்கத்தில் புகுந்துள்ள பல புதிய பாக்கங்களை நீலகேசி எடுத்துக் காட்டினாள். சங்க தத்த ஸ்தவிரன் என்ற புத்த மடத்துறவி புத்த கோட்டத்தில் ஒரு பெண் துறவியைக் கண்டு அவளைத் தன்னுடன் கூடியிருக்குமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. பெண் துறவி, கோட்டம் தூய இடமாயிற்றே; இச் செயலுக்கு இவ்விடம் ஏற்றதல்ல என்றாளாம். சங்கதத்தன்; துறவியர்க்குக் கோட்டமும் வீடும் ஒரே நிலையை யுடையவைதான் என்று ஒழுங்கு கூறி யமைந்தானாம். இன்னொரு துறவி, ஒரு பெண்ணின் இறந்த