பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

47

பிணத்தைத் தழுவினான். இது கண்டு கடிந்த ஒருவரிடம், அவன் பிணத்துக்கும் உயிருள்ளவர்க்கும் இடையே அறிஞர் காணும் வேறுபாடு யாது? ஒன்று பிணமாய் விட்ட உடல்; மற்றொன்று பிணமாக இருக்கும் உடல். வேற்றுமை அவ்வளவு தானே என்றானாம். (இன்னோரிடத்தில் துறவி யொருவன்,பெண் துறவி ஒருத்தியை இணக்குவிக்கையில் சிற்றின்பம் சமயத்துக்கு

ரான தீமையன்று; மக்கள் வாழ்க்கைக் குழுவின் (சமூகத்தின்) கருத்துக்கு மாறானது மட்டுமே மக்களுக்குத் தெரிந்து அவர்கள் புண்படாத வகையில் நடந்தால் துறவியர்க்கு இழுக்கொன்று மில்லை என்று பேசினான். இங்ஙனம் புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளும் மனித ஒழுக்கத்தின் அடிப்படை ஒழுங்குகளும் பல வகையில் சமய நூல்கள் மூலமே புறக்கணிக்கத் தூண்டுதல் தரப்பட்டிருக்கின்றன. ஒழுங்குகளைத் தளர்த்தி ஒழுங்கின்மையைத் தூண்டும் இத்தகைய தெளிவான விலக்குகள் பதினெட்டை நீலகேசி எடுத்துக் காட்டினாள்.

மேலும் துறவினை மேற்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் புத்த துறவிக்கு, எத்தனையோ ஆடையணிவகைகள் உரிமை யாக்கப்படுவது பொருத்தமற்ற செயல். புத்தசமயம், எல்லா உயிர்களுக்கும் அருளும் அன்பும் காட்டவேண்டும் என்று கூறுகிறதாயினும், ஊனுண்ணலுக்குப் பக்க மேளம் கொட்டு கிறது. வீடு பேற்றுக்கு வழி, ஒழுக்கமே என ஒரு பால் பறை சாற்றுகிறது; மறுபால் பாழ்க்கோட்பாடு (சூனியவாதம்) பேசி ஒழுக்கத்தின் அடிப்படையான உயிர் (ஆத்மா) இப்பொருள் என்று கூறுகிறது. எல்லாப் பொருள்களும் மலமுடையவை என்று கூறினும். புத்தர் சிலைக்கு மலரும் பூசையும் தரப்படுகின்றன. எல்லாப் பொருள்களும் கணந்தோன்றி மறையும் நிலையாமை உடையவை என்று கூறிக்கொண்டே பாரிய கோயில்களும் மடங்களும் எழும்புகிறது. உயிர்த் தொடர்பும் மறுபிறப்பும் மறுக்கப்படுகின்றன. புத்தர் பிறப்புக்களில் மேற்கொண்ட விலங்கு, பறவையுருக்கள் வணங்கப்படுகின்றன. இங்ஙனம் வழிபடப்படும் இத் தெய்வ உயிர்களும், பசிக்கு உணவாகப் பயன்படுவதில் குறையில்லை.

இக் குளறுபடிகளைக் கேட்டு அர்க்க சந்திரன் மனங் குழம்பிப் புத்தசமயத் திட்டங்களின் தவறுகளை ஒத்துக்