பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 28

கொண்டான். புத்தர் பேசும் கொல்லாமையும் ஒழுக்கநெறியும் வாய்ப் பசப்பே என்பதை உணர்ந்து நீலகேசியால் அரு ளுரைக்கப் பட்ட சமண அறத்தை மேற்கொண்டு அவனும் சமண அறத்தின் மும்மணிகளை வழி காட்டியாகக் கொண்டு உய்ந்தான். பிரிவு (4) மொக்கல வாதம்

அடுத்தபடியாக நீலகேசி பதுமபுரம் சென்று புத்தரின் நேர் மாணவரான மொக்கலன், சாரிபுத்திரன் ஆகிய இரு வருள் ஒருவனான மொக்கலனை அடைந்து புத்தமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி வாதிட்டாள்.

இவ்வாதத்தில் பெரும் பகுதி சமணக்கோட்பாடுகள் பற்றிய புத்தர் கண்டனங்களுக்கு விடைதரும் முறையில் அமைந்துள்ளது. (பெரும்பாலும் இவ்வாதப் பகுதி புத்த தமிழ்க் காவியமாகிய குண்டலகேசியின் இறந்துபட்ட பகுதிகளுக்கு மறுப்புரை களாயிருக்கவேண்டும்)

உள்ள

நீலகேசி புத்தத் துறவிக்குக் சமணத் துறவிக்கும் உ வேறுபாடுகளை விளக்குகிறாள். வெளித் தோற்றத்திலேயே சமணத்துறவியர் ஆடையைத் துறந்து எளிய வாழ்வு உடை யவர். புத்தத் துறவியரோ பலவகைத் தையல்கள் வாய்ந்த பல பேருடைகளை அணிந்தனர். இவ்வுடை வண்மை துறவுக்கு அறிகுறியாகாது. தொடக்க காலத்தில புத்தரும் கந்தை களைப் பொறுக்கித் தைத்த உடைகளையே அணிந்தனர். பழைய எளிமை கைவிடப்பட்ட பின் குருட்டுத்தனமாகப் பொருளற்ற மறையில் பகட்டான துணிகளும் அதேபோன்று தைக்கப்பட்டன. அதோடு கந்தை நிறத்தை உண்டுபண்ணவே தொடக்கத்தில் காவி நிறச் சாயமேற்றப் பட்டது. ஆடை, தையல், சாயம் முதலியவற்றுக்கான தோல்களால் துறவியரிடையேயும் உலக வாழ்வு பெருகியதை விளக்கி நீலகேசி நகையாடினாள்.

மொக்கலன் இது கண்டு சினங்கொண்டு, "நான் வாதத் தில் இரணியனை வென்றவன். அவளேபோல் நீயும் இழிவு பட்டே போவாய் என்பது உறுதி” என்றான். நீலகேசி ஒருவரை வென்றாயானால், நான் ருவரை வென்றிருக்கிறேன். குண்டலகேசியும், அர்க்கசந்திரனும் என்னிடம் தோற்றுப் பணிந்தனர்" என்றாள். மொக்கலன் அது கேட்டு வியப்படைந்தான்.