பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

49

மொக்கலன் சமண நெறியின் கொள்கைகளாகிய இயக்கதத்துவம்(தர்மம்) நிலைத்தத்துவம்(அதர்மம்), காலம் வான் (இடைவெளி) உயிர் (ஜீவன்) பொருள் (புற்கலம்), நல்வினை, தீவினை, கட்டு (பந்தம்), வீடு (மோஷம்) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இவற்றைப் பற்றிச் சமண ஆசிரியரான நாதகுப்தர் வாதிட்டுக் குண்டலகேசியிடம் தோற்றார் தோற்றார் என்றான். குண்டலகேசியின் வாதங்களையே மொக்கலன் கூற, நீலகேசி அவற்றிற்கு விடையிறுத்தாள்.

இயற்கையிலடங்கிய ஆக்கப் பொருள்களாகிய ஐந்து மூலப்பொருள்களுள் (அஸ்திகாயங்களுள்) இயக்கம்(தர்மம்) நிலை (அதர்மம்) ஆகிய இரண்டு அடிப்படைத் தத்துவங் களைப் பற்றிப் பலர் தப்பெண்ணங் கொள்கின்றனர். இயக்கம் பொருள்களியங்க இடந்தருவது, இயக்குவிப்பதன்று. கடலில் நீரின் தன்மை இருப்பதால், கப்பல் ஓடமுடிகிறது. ஆனால் ஓட்டுவது காற்று முதலியவற்றின் ஆற்றல். இயக்க தத்துவம் நீரின் தன்மைபோன்றது; காற்றின் ஆற்றல் போன்றதன்று. அது போலவே, நிலை (அதர்மம்) இயக்கத்தைத் தடுக்க இடம் தருவது. தடுக்கும் ஆற்றல்கள் வேறு. ஒன்றுக்கொன்று மாறான இத்தன்மைகள் எங்ஙனம் பொருந்தும் என்ற மயக்கத்திற்கு நீலகேசி விடையிறுத்தாள். இயக்கமில்லாமல் உலக வாழ்வு இல்லை. மாற்றம் இல்லை. ஆனால் நிலை இல்லாமல் மாறுபாடிடையே தொடர்ச்சி யே தொடர்ச்சி இராது. எனவே, இரண்டும் ஒத்தியல்வதே உலகு' என்று அவள் தெளிவு படுத்தினாள்.

நீலகேசி: புத்தராகிய நீங்கள் உலகின் ஆக்கப்பொருள் ஐந்து கந்தங்கள் என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் உலகின் எல்லைக்கப்பாலுள்ள தெய்வ உலகு, நரகு எப்படிப் பட்டவை?

காலம் என்ற ஒன்றில்லை என்கிறீர்கள். ஆயினும் நொடிகளைக் பற்றியும் பெரூழி (கற்பங்) களைப் பற்றியும் பேசுகிறீர்கள். வானகோளங்கள் பொய் என்கிறீர்கள். ஆனால் வானநூலின்படி எதிர்காலப் பலன் கூறுகிறீர்கள்.

உயிரின் உண்மையை மறுக்கிறீர்கள். மறை (ஆகமங்) களாலன்றிக் கண்கூடு (பிரத்தியக்ஷம்) உய்ந்தறிவு (அனு மானம்) ஆகிய அளவையால் அதனை நிலை நாட்டக் கூடுமா