பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 28

என்கிறீர்கள். உங்கள் ஐந்து கந்தங்களுள் அறிவுக்கந்தமும் இதுபோன்றதுதானே. உள்ளுணர்வால் அறியக் கூடுவதாயின், உயிரும் அப்படியே? மறைமொழியால் காணப்படுவதெனின், அது உங்களுக்கு உடன்பாடன்று ஆயிற்றே?

தேவர்கள் பற்றிய கதைகளைக் கூறுகிறீர்கள். அவர்கள் கண்கூடாகவோ, உய்த்தறிவாலோ அறியக்கூடாதவராயிற்றே? மறையுறையால் மட்டும்தானே அறியப்படக்கூடும்?

அம்மறைகளே (புத்தசாதகங்கள்) மறுபிறப்புக்களை ஏற்பதால் உயிரையும் ஏற்பவை ஆகின்றனவே?

உயிர் உடலின் உருவுடையது என்ற சமணரின் கொள்கையை மொக்கலன் எதிர்த்தான்.

நீலகேசி: உயிர் உடலுடன் சேர்ந்தியங்குவது என்பதே இதன்பொருள். உயிர் ஓர் அணு என்ற கருத்தை எதிர்க்கவே இங்ஙனம் கூறப்பட்டது. உயிர் அணுப்பொருளாயின், அது உடலின் ஓரிடத்திலேயே இருக்கும். உடலில் பகுதியாய்விடும். ஆனால் உயிர், உடல்போன்ற பரப்பொருளன்று. உடல் முழுவதும் இயங்கும் ஆற்றல். ஆகவே, வடிவற்ற அதன் தன்மை உடல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.இது பொருத்தமற்ற கூற்று என்ற கூறிவிடமுடியாது. னெனில் புத்தர் கொள்கைப்படி அறிவுக்கந்தத்தின் செயலாலேயே ஊறு உணர்ச்சி ஏற்படுகிறது. ஊறு உணர்ச்சி உடல் முழுமையும் பரந்து இருப்பது. எனவே, அறிவுக்கந்தமும் உடல் முழுவதும் பரந்து நிற்பதாகிறது. அறிவுக் கந்தம் உடல் முழுமையும் பரந்திருப்பது கூடுவதானால், உயிரின் ஆற்றலும், உடல் முழுவதும் பரந்திருப்பது கூடுவதேயாகும்.

து

மொக்கலன்: உயிர் அறிபொருள் (சேதனம்); உடல் அறிவில் பொருள் (அசேதனம்). இங்ஙனம் மாறுபட்ட தன்மை உடையவற்றுக்கிடையே தொடர்பு இருத்தல் எவ்வாறு? இது காளை காலிடறிக் கழுதை நொண்டியாயிற்று என்பது போன்றதல்லவா?

நீலகேசி: உயிர், உடல் முழுவதும் பரந்து நேரிடை யாகவே உணர்கிறது என்பது சமணக் கோட்பாடு. அதற்கு இடையீடு எதுவும் வேண்டுவதில்லை. (உடல் அறிகருவி மட்டுமே) நீங்கள் கூறும் மறுப்பு உங்கள் நிலையை