பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

51

மறுப்பதேயன்றிச் சமணர் நிலையை யல்ல. உயிர்வேறு; அறிவு வேறு உயிரில் பொருள் ஆகிய உலகு (பிரகிருதி) வேறு, என்ற உங்கள் கோட்பாடும், வேறுவேறு கந்தங்கள் கோட்பாடும் இம்மறுப்புக்குப் பெரிதும் இடம் தருபவை. ஏனெனில், தொடர்பற்ற இவை ஒன்றுக்கொன்று காரணகாரிய மாதல் எங்ஙனம்!

மொக்கலன்: சமணர் காரண காரிய ஒழுங்குப்படி காரியம் நிகழும்போது, காரணமும் உடனிகழவேண்டுமென்று கூறப் படுகிறதே. அப்படியானால், நல்வினைப்பயன் நாடிக்கோயில் கட்டுபவன் உடனடியாகவே அதன் பயனை அடையவேண்டு மன்றோ? பயன் பிற்பட்டுக் காணப்படுமென்றால், அதன் முன் காரணம் அழிந்துபடுமே.

நீலகேசி: புத்தர் நெறிப்படி காரணம் அழிந்தபின் காரியம் நிகழும். இது இல்காரியக் கோட்பாடு (அசத்காரியவாதம்) எனப்படும். நீங்கள் நீங்கள் இதனை மனத்துட் கொண்டே பேசுகின்றீர்கள். சமணர் கோட்பாடு உள்காரியக் கோட்பாடு (சத்காரியவாதம்) எனப்படும். ஆனால் உங்கள் மறுப்பு, சாங்கியர் உள்காரியக் கோட்பாட்டைக் கருதிய மறுப்பேயாகும். சாங்கியர், காரணமும் காரியமும் ஒன்றே என்பர். சமணர் உள்காரியக் கோட்பாடு இவ்விரண்டு நிலைகளினின்றும் வேறுபட்டது. காரியம், காரணத்தின் வளர்ச்சி ஆதலின், அதன் தொடர்ச்சி என்றும் ஆயின், அது காரணமன்று என்றும் ஒப்புமையில் வேற்றுமை கற்பிப்பது. உலகியலில் சமணர் சமணர் கொண்ட கொள்கைக்கு இது ஒத்ததேயாகும். புத்தர்போல் உலகு தொடர்ச்சியற்ற மாற்றங்கள் என்றும் கொள்ளாது, வேறு சிலர் போல் மாறுபாடற்ற ஒரே நிலைப்பொருள் என்றாவது

கொள்ளவில்லை.

மொக்கலன்: சமணர் துன்பத்தை மேற்கொள்வதே நோன்பு (தவம்) என்கின்றனர். அதனால் நல்வினை வரும் என்று கருதப் படுகிறது. ஆனால் துன்பம் தீவினைப் பயனாயிற்றே. ஆகவே, தவம் செய்பவன் முன்னைய தீவினையை நுகர்கிறான் என்றாகிறது.இதனால் நல்வினைப் பயன் வருமென்பது எவ்வாறு?