பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 28

நீலகேசி: சமணத்துறவி மேற்கொள்ளும் துன்பம் தீவினைப்பயன் அன்று. ஏனெனில், அது தானே அவனை வந்தடைவதன்று. அவனாக விரும்பி மேற்கொள்வது. அது தவறு உட்கொள்ளும் கசப்பு மருந்து போன்றது. பயன் நாடுபவன் அதனைத் துயராகக் கொள்வதுமில்லை. கொண்டாலும் அது பயனோக்கிய கருவியேயன்றி வேறன்று. மேலும் புத்தர் கட்கு அமைந்த துதாங்க ஒழுங்குகள் இவ்வகைப்பட்டவைதானே! புத்தரே தன் கண்ணும் தலையும் பிறருக்கு விரும்பி ஈந்ததை என்னென்பது?

மெக்கலன்: சமணர் மேற்கொள்ளும் இறப்புவரை உண்ணாத நோன்பு (சல்லேகனம்) கொல்லாமை நெறி யினருக்கு ஒவ்வாத தற்கொலை முறையன்றோ?

நீலகேசி: சாவது விலக்கமுடியா நிலையில் மட்டுமே அது மேற்கொள்ளப்படும். எனவே, அது தற்கொலையன்று. கொலையை ஒறுப்பதுபோலவே, கொல்லாநோன்பின னர் களான சமணர் தற்கொலையையும் வெறுக்கவே செய் கின்றனர். இந்நோன்பு உயிர் நீப்பதற்கன்று, உயிர் நீங்குவதன் முன், உயிர் நிலையின் மேம்பாட்டுக்காவன செய்வதேயாகும்.

மொக்கலன்: சொல்லுதல் தீவினை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், சமணர் ஊனுண்ணலைத் தீவினை என்பதேன்? தான் கொல்லாதபோது தின்ப வனுக்குத் தீவினை ஏது?

நீலகேசி: தீமையை நேரடியாகச் செய்வது மட்டுமன்று, தீமையைச் செய்யத் தூண்டுவதும் தீவினையே. நல்வினை வகையில் நீங்களே இதை ஒத்துக்கொள்கிறீர்கள். போதி மரத்தைச் சுற்றுவது நேரடியான நல்வினையன்றாயினும், புத்தம் நல்வினையை நினைவூட்டுவதாதலால் மறைமுறை நல்வினை எனக் கொள்கிறீர்கள். ஊனுண்ணலும் அது போன்ற மறைமுறைத் தீவினையின் பாற்படும்.

மொக்கலன்: சமணத் துறவியர் மயிற்பீலியைப் பயன் படுத்துவது, மயிலைக் கொல்விக்கத் தூண்டுவது தானே? அதுவும் மறைமுறைத் தீவினையன்றோ?