பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 28

நீலகேசி: புற்று வளர்ச்சியும் உயிர் வளர்ச்சியும் சொல் லளவில் வளர்ச்சிகளாயினும், வேறுவேறு வகை வளர்ச்சி கள். புற்றின் வளர்ச்சி, பொருள் புறத்திருந்து அடுக்கடுக்காய் மேல் சேர்ந்து வளரும் வளர்ச்சி. உயிர் வளர்ச்சி, உள் ளீடாய்ப் பொருள் முழுதும் உருப்பெருக்க மடைந்து வளரும் உள் வளர்ச்சி. மயிர் வளர்ச்சியும் நக வளர்ச்சியும் கூடப் புற்றுவளர்ச்சி போன்றவையே. செம்பஞ்சி ஏற்றிய நகம் வளர்ந்தபோது, புத வளர்ச்சியைத் தனிப்படக் காணலாம்.

மேலும் மரவகைகள் பிற உயிரினங்களைப் போலவே அவ்வப்போது இலைகளை மடக்கி உறங்குகின்றன. புளி முதலியவற்றில் இது எளிதிற் காணப்படும்.

மொக்கலன்: ஒருசில மரங்களே இலைகளை மடக்கு கின்றன. இது உறக்கம் என்று கொள்வதற்கில்லை.

நீலகேசி: உயிரினங்கள் எல்லாம் உறங்கும்போது கண் மூடுவதில்லை. மரவகைகளும் அப்படியே.

மேலும் மரவகைகள் உயிரினங்களைப் போலவே விருப்பு, வெறுப்பு, செயலெதிர்செயல் உடையன.

மொக்கலன்: அனலருகில் கில் பட்டவுடன் மெழுகு உருகுவதில்லையா? அது உயிர் எனக் கொள்வதில்லையே. செயல், எதிர்செயல், உயிரின் குறியாவது எங்ஙனம்?

நீலகேசி: மெழுகின் மாறுதல் அனலின் சூடுபோன்ற புறநிலையைமட்டும் பொறுத்தது.மரவகை, உயிரினம், ஆகியவை தம் விருப்பு, வேண்டுதல் ஆகியவற்றுக்கேற்பச் செயலாற்றும்.

மரவகைகளும் உயிர்களும் வளர்வதற்கும் வாழ்வதற்கும் எல்லைஉண்டு. வளர்ந்தபின் அவை நலிந்து அழிவு எய்தும். உயிரில் பொருள்களுக்குத் திட்டமான வரையறையும் எல்லையும் இல்லை. விறகுள்ளவரையும் எவ்வளவு நாள் வேண்டுமாயினும் தீ எரியும்.

வெட்டினால் அழிவது, நோயினால் நலிவது, குணப் படுவது ஆகிய பண்புகள் வாளிலும் தோலிலும் காணப்படும் மாறுதல் போன்றவை. காந்தத்தால் வளைந்த வாள் நிமிர்வது போல்தான், மருந்தால் நோய் நீங்குவதும் என்று பலவாறு