பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

55

மொக்கலன் வாதிட்டான். நீலகேசி அவற்றின் பொருந்தாமை விளக்கி, தம் வடிவும் பண்பும் மாறா இனப்பெருக்கம் உயிர்வகைகளின் சிறப்புப் பண்பு என்பதையும் விளக்கி

னாள்.

மொக்கலன்: நில உயிர், நீர் உயிர், அனலுயிர், காற்றுயிர், வானுயிர் என்று மூலப் பொருள்களிலும் உயிர்களிருப்ப தாகக் கூறுகிறீர்களே. இது உயிரில் பொருள்களிலும் உயிர் இருப்பதாக மயங்குவதல்லவா?

நீலகேசி: மூலப் பொருள்கள் (பூதங்கள்) உயிர் உடை யவை என்று சமணர் கொள்வதாகக் கொள்ளுகிறீர்கள். இது தவறு. கண்காணா நுண் உயிர்களாகிய ஓர் உணர்வு உயிர் இனங்கள் எண்ணற்றவை உண்டு. அவை நில நீர் முதலிய வற்றிலிருப்பதையே இப் பாகுபாடு குறிக்கும்.

மொக்கலன்: நிலயுடைமை (நித்தியம்) நிலையாமை (அநித்தியம்) ஆகியவை மூலப்பண்புகளா? தற்செயல் நிகழ்ச்சிகளான துணைப்பண்புகளா? உலகு நிலையுடை மையை மூலப்பண்பாகக் கொண்டதானால், உயிரினங்கள் மீது அதன் தாக்கு எவ்வாறு ஏற்படும்? நிலையாமை மூலப் பண்பானால், உயிரினங்கள் ஒரே தொடர்ச்சியான உலக நுகர்ச்சி பெறுதல் எங்ஙனம்?

நீலகேசி: சமணர் முடிந்த பொருளொருமைக் கோட் பாட்டினர் (ஏகாந்தவாதிகள்) என்ற தப்பெண்ணத்தால் வ்வினா எழுந்தது. சாத்தன் என்ற ஒரே ஆள் வேலனுக்குத் தம்பியாகவும், மூலனுக்கு அண்ணனாகவும் இருத்தல் கூடு மன்றோ? இருதன்மையும் ஒரே பொருளின் இரு வேறு தொடர்புகளே. அதுபோல, நிலையுடைமையும், நிலை யாமையும் உலகின் இருவேறுபட்ட தொடர்புகள் முழுமை யாகப் பார்க்க அது நிலையுடையது. பகுதிகளாகப் பார்க்க அது நிலையாமையுடையது. இன்னொருவகையாகக் கூறினால், மூலப்பண்பை (அனுவிருத்த சுவபாவம்) நோக்கப் பொருள் நிலையுடையது. துணைப்பண்பை (வியாவிருத்த சுவாவம்) நோக்க நிலையாமை உடையது.