பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 28

மொக்கலன்: பொருள்களின் அடிப்படை இயல்பு நிலையானது என்றும், தற்காலிக இயல்பு நிலையாத தென்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் பண்புகளில் லாமல் அவற்றுக் கப்பாற்பட்ட பண்பி, அல்லது பொருள் இல்லையென்று கொள்ளலாகு மல்லவா?

நீலகேசி : பண்புகளிலிருந்து பொருளைப் பிரிக்கமுடி யாது என்பது நீங்கள் கூறுவதன் பொருளாயின், அது சரியே. ஆனால், பண்புகளின் கூட்டே பொருள் என்று கொள்வ தானால் அது தப்பாகும். கடல் நிலையானது; அலைகள் நிலையாமையுடையவை. பொன் நிலையானது; அணிவகை கள் நிலையாதவை. ஆயினும், அலைகள் கடலிலெழுவனவே யன்றிக் கடலல்ல. அணிவகைகள் பொன்னாலானவையே யன்றிப் பொன்னல்ல.

மொக்கலன்: பொருளும் பண்பும் இருபொருள்களா? ஒரே பொருளா? இருபொருள்கள் என்றும் ஒரு பொருள் என்றும் நீங்கள் மயங்கவைக்கிறீர்கள்.

நீலகேசி: மெய்ம்மை ஆராய்ந்து பார்ப்பவருக்கு இதில் மயக்கமில்லை. புத்தசமய நூலிலேயே ஐங்கந்தங்கள் சேர்ந்தே ஆன்மா செயலாற்றுக்கின்ற தாயினும், கந்தங்களே ஆன்மாவல்ல. ஒரே சித்தம் முன்னைய சித்தத்தின் பயனாகவும், வருகிற சித்தத்தின் காரணமாகவும் கொள்ளப்படுகிறது. பொருளுக்கு இவ்விடங்களில் இரு நிலைகள் கூறப்படுகின்றன. இவைபோலவே, பண்பும் பொருளும் ஒன்றுபட்ட ஒரு மெய்ம்மையின் இரு வேறு நிலைகளாம்.

ரே

மொக்கலன்: மெய்ம்மை உரைகடந்த தென்கிறீர்கள். உரைகடந்ததென்றதே அதுபற்றிய உரைதானே. உரை கடந்த ஒன்றுபற்றி வாளா இருத்தலன்றோ வேண்டும். அதுபற்றி வாதிட டமேது?

நீலகேசி: உரைகடந்தது (அவ்க்தவ்யம்) என்றால், உரைக் கிடமில்லாததென்று பொருள் அன்று. அது ஒரு தரப்பில் அழியாததென்றும், ஒரு தரப்பில் அழிவதென்றும், ஒரு தரப்பில் ஒன்று என்றும், ஒருதரப்பில் வேறுபாடுடையதென்றும்