பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

57

கூறப்படலாம். உரைகடந்தது என்பதன்பொருள், முற்ற விளக்க உரைபெற முடியாதது என்று மட்டுமே பொருள்படும்.

மொக்கலன்: பொருள்கள் மாறுகையில் அடிப்படை ஒருமைப்பாடு இருக்கவேண்டும் என்கிறீர்கள். பால் தயி ராகும்போது, பாலே தயிருருவில் உள்ளது என்றால், தயிர் பால்தான் என்று ஆகும். அப்போது மாறுபாடு என்ன?

நீலகேசி: பொருளின மாறுபாட்டை உள்பயன் கோட் பாடு (சத்காரியவாதம்) எனச் சமணரும், இல்பயன்கோட் பாடு (அசத்காரியவாதம்) எனப் புத்தரும் கூறுவர். இல்பயன் கோட்பாட்டின்படி பால் முற்றிலும் ஒழிந்து தயிர் புதிதாகத் தோன்றுகிறது என்று கொள்ளப்படுகிறது என்று கொள்ளப் படுகிறது. இது உண்மையானால், பால் ஏன் தயிராக மட்டும் மாறவேண்டும்? எண்ணெயாகவும் தேனாகவும் மாறலாமே. பால், தன் அடிப்படைத் தன்மை மாறாமல் உருவில்மட்டும் தயிராக மாறுகிறது. அதாவது பாலின் அணுக்கள் உருவிலும் ஒழுங்கிலும் மட்டும் மாறி, தயிர் அணுக்களாகின்றன. காரணகாரியத் தாடர்பில்லாவிட்டால், புத்தர் வீடுபேறு (நிர்வாணம்) மதிப்பற்றது.யாரும் வீடு பெறலாம் பெற்றவர் பழைய நிலைக்கு மீளலாம் என்றாய்விடும்.

மொக்கலன் : உண்மை அன்மைபற்றிய உங்கள் கொள்கைப்போக்கு புதுமையானது. தன்னிலையில் உண்மை வாய்ந்த ஒரு பொருளே பிறிதொரு தன்மை, இடம், காலம், முறைமை ஆகியவைகளில் அன்மையாகவும் கூறப்படும் என்பது எவ்வாறு? ஓரிடம் இருப்பது மற்ற இடமில்லை என்று கூறுவது ஒரு பெரிய கோட்பாடா?

நீலகேசி: முக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையிலும் உள்ள உண்மை, இல்லாத இன்மை ஆகியவற்றிலிருந்து தன்மை, இடம், காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபாடும், உண்மை

ன்மைகளைப் பிரித்தறிவதற்கே இப்பிரிவினை ஏற்பட்டது. யானை ஒரு பெரிய விலங்கு என்பது என்றுமுள்ள உண்மை. யானை தறியிற் கட்டுண்டு நிற்கிறது என்பது தற்காலிக உண்மை. ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் மட்டுமே குறிப்பிடுவதாகும். என்றுமுள்ள தன்மை, உண்மை.