பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 28

முயற்கொம்பு போல் என்றுமில்லாத தன்மை, இன்மை. தற்காலிகமாக இல்லாத தன்மை அன்மை. ஒரு பொருள் இங்கு அன்று, இவ்வாறு அன்று என்றால் வேறிடம் உண்டு, வேறு பண்பு உண்டு என்று தெரியவரும்.

மொக்கலன்: பெயரில்லாத பொருளும் நுகரப்படாத பொருளும் பொருளல்ல என்று கூறப்படுகிறது. ஒருவனால் நுகரப்படாத பொருளும், ஒருவன் பெயர்த் தொகுதியில் அடங்காத பொருளும் இல்லை என்றல் கூடுமா?

நீலகேசி: நீங்கள் குறிப்பிடுவது சமணர் கொள்கை யன்று. நாங்கள் கூறுவதெல்லாம் நம்மால் பெயரிடப்பட்டு நுகரப்படும் பொருள்.உண்மையற்றதாயிருக்க முடியாது என்பதே.

மொக்கலன்: ஒரு பொருளின் தன்மை அதற்கே சிறப்பு என்றால், இரும்பு பழுப்படைவதையும், தண்ணீர் வெந்நீரா வதையும் என்னென்பது. அவற்றின் தன்மையாகிய கருமையும் தண்மையும் மாறுபடுகின்றனவே.

நீலகேசி: இருபொருளின் தன்மை ஒரு பொருளில் காணப்படுவதால், பொருள் மாறுவதுபோல் தோன்றும். அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. சேர்க்கை நீங்கிய பின், தனித்தன்மை மீண்டும் காணப்படும். இரும்பு சிவப்பதும், தண்ணீர் வெப்பமடைவதும் தீயின் பண்பு அதில் ஏறுவத னாலேயே. தீயின் செயல் நீங்கியபின், அவை பழைய தன்மை யுடனேயே விளங்கும். பூவிருந்த தட்டில் சிலகாலம் மணம் இருப்பதும் இவ்வாறே.

மொக்கலன்: துறக்கம் (வானுலகு) ஓர் இடமானால், அதுவும் மாட்டுத் தொழுபோன்ற ஓர் இடமாதலால் அதன் சிறப்பு, உயர்வு யாது?

நீலகேசி: புத்தர் அறிவுபெற்ற இடமாகிய போதியடி, பிற ங்களிலிருந்து எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே என்க.

மொக்கலன்: பிறப்புடைய உயிர், துறக்க மெய்திய பின் மீள்வதில்லை. இச்சிறப்புத் தரத் துறக்கத்தில் என்ன இருக்கிறது? நீலகேசி: இது இடத்தின் சிறப்பல்ல. அங்கே செல்லு முன், உயிர் இருவினை வேரறுத்துவிடுவதால் வரும் பயன்.