பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

59

மொக்கலன்: வீடுபெற்ற உயிருக்கும் அறிவு இருப்பதால், செயலும் வினையும் உளதாகவேண்டுமே.

நீலகேசி: உலகின் உயிர்கள், அறிவு பொறியறிவாத லால் வினையெய்தும், வீடெய்திய உயிரின் அறிவு, வினை யறுத்த அறிவு. அது வினைப்பயன் சாராது.

மொக்கலன் ஐயங்களெல்லாம் நீங்கப்பெற்றுச் சமண அறிவுபெற்றான். அதோடு நீலகேசியைத் தன் தலைவரான புத்தரிடமும் செல்லும்படி தூண்டுகிறான்.

பிரிவு. 5. புத்த வாதம்

புத்த சமயத்தைத் தோற்றுவித்த முதல்வரான புத்த பிரான் கடற்கரை யோரமுள்ள கபிலபுரத்தில் வாழ்ந்து வந்தார். உணவுக்கு மீன் எளிதில் கிடைப்பதற்காகப் புத்தர்கள் கடற்கரையோரமே மடங்கள் அமைப்பர் என்று இங்கு ளனமாகக் குறிப்பிடப்படுகிறது. ஊன் விலைஞரும் உயிர்க் கொலைஞரும் அடுத்துத் தொழிலிடங் கொண்டிருந்தனர் என்பதும் குறிக்கப்படுகிறது) அவர் அரசர் மரபினராயிருந்த தற்கேற்ப, அவர் தங்கிய மடம் அரண்மனைக் கொப்பான தாகவேயிருந்தது. அவர் ஓர் உயர்ந்த தவிசின் மீதமர்ந்து, தம்மைப் புடைசூழ்ந்திருந்த தம் திருச்சபை மாணவருக்குப் புத்தநெறியை விளக்கிக் கொண்டிருந்த சமயம், நீலகேசி அவரைச் சென்று

கண்டாள்.

நீலகேசி விருப்பத்திற் கிணங்கப் புத்தபிரான் தம் நெறி யின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கினார்.

புத்தர்புரான்: மெய்ம்மையின் அடிப்படைத் தத்துவங் கள் ஐந்து கந்தங்களாக வகுக்கப்படும். அவை உருவகந்தம் (ரூபம்) உணர்ச்சிக்கந்தம் (வேதனை) அறிவுக்கந்தம் (விஞ்ஞானம்) பெயர்க்கந்தம் (சம்ஜ்ஞா) செயற்கந்தம் (சமஸ்காரம்) என்பவை.

உலகின் பொருள்கள் அனைத்தும் உருவகந்தத்தைச் சார்ந்தவை. அப்பொருள்கள் எட்டினங்களாக (அஷ்டகம்) அறியப்படும். அவையாவன:மண், நீர், காற்று, அனல் ஆகிய மூலப்பொருள் (பூதங்) களும் அவற்றுக்குச் சரியான பொறி யுணச்சிகளாகிய நிறம், சுவை, மணம், ஊறு ஆகியவைகளும் ஆம்.