பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 28

இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத ஒரே தொகுதியாக எட்டினம் எனப்படும். மூலப்பொருள்களின் பண்புகள் முறையே திட்பம், நெகிழ்ச்சி, வெப்பம், சுழற்சி ஆகியவை. அவற்றின் செயலும் நால்வகைப்படும்.

உணர்ச்சிக்கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகைப்படும். அறிவுக்கந்தம், பொறி அறிவு ஐந்து, மன அறிவு ஒன்று, ஆக ஆறு அறிவுகளையும் பகுதி களாகவுடையது. பெயர்க்கந்தமும் இதேபோல ஆறு வகை. செயற்கந்தம் மன மொழி மெய் என மூவகை.

இக்கந்தங்கள் கணந்தோறும் தோன்றி மறைவன. (பல தனிப்படங்கள் விரைவாக ஓடித் திரைக் காட்சியில் தொடர்ச்சி காட்டுவதுபோல) அவை தொடர்ச்சியுடையவைபோலத் தோற்றுதல் மயக்கமே. உண்மையில் எல்லாப் பொருள்களும் நிலையற்றனவே.

ஐந்து கந்தங்களின் சேர்க்கையையே ஆன்மா என்ப தன்றி, ஆன்மா அல்லது உயிர் என்ற ஒன்றில்லை. கண வாழ்வும் அழிவுத் தன்மையுமுடைய இக்கந்தங்கள் நிலை யாமை, துன்பம், தூய்மையின்மை, உயிர்ப்பின்மை (அனாத்மா) ஆகிய இயல்புகளை உடையன. இவற்றின் இயல்பை உணர்ந் தவன் உலகத்தோற்ற (சம்சார)த்தின் தன்மை உணர்ந்து துறக்கம் அல்லது வீடு (நிர்வாணம் அல்லது மோக்ஷம்) அடைகிறான்.

நீலகேசி: ஐந்து விரல்கள் சேர்ந்த கைபோலும், செங்கல் முதலிய பொருள்கள் சேர்ந்தமைந்த வீடுபோலும் கந்தங்கள் சேர்ந்ததே மெய்ம்மை (உலகு) என்கிறீர்கள். ஆனால் கந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க ஒண்ணாதவை; ஒருங்கே கணந்தோறும் தோன்றிக் கணந்தோறும் அழிபவை என்று கூறுகிறீர்கள்.விரல்கள், வீட்டுக்கான பொருள்கள், இவ்வகையில் பொருத்தமான உவமைகள் அல்ல. ஏனெனில் அவை தனித்தனி இயங்கவோ தோன்றவோ அழியவோ கூடும். கந்தங்கள் கூட்டாகவோ இயங்குவதற்கும் அழிவதற்கும் அவற்றைப் பிணைக்கும் அடிப்படை இணைப்பு இன்றியமையாதது.இதனை ஏற்றால் ஆன்மாவை ஏற்றதாகும். இக்கந்தங்கள் அத்தகைய ஆன்மாவின் பண்புகளேயாகும்.