பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

61

நாலு முதற்பொருளைக் கூறுகையில் அவற்றின் பண்பும் செயலும் குறித்தீர்கள். பொருளினின்று வேறாகப் பண்பும் செயலும் பொருளாவது எங்ஙனம்? பிற கந்தங்களையும் பிரித்தறிய அறிவுவேண்டும். பொறியுணர்விற்கு அடிப்படையான மண்ணை ஏற்கும்போது, உணர்ச்சி முதலிய கந்தங்களுக்கு அடிப்படையான உயிரை (ஆன்மாவை) ஏற்காததேன்?

புத்தர் : நாங்கள் ஏற்பதெல்லாம் பண்புகள்தான்; பொருள்கள் அல்ல.

நீலகேசி: அப்படியானால் பண்புகளே பொருள்களாயின. அவற்றின் செயல்கள் பண்புகளாகும். பொருள் பண்பு உறவு ஏற்பட்டுவிடுகிறது. நீங்களோ அத்தகைய உறவை ஏற்ப

தில்லை.

புத்தர்: பண்புகளல்லாது பண்பி (பொருள்) ஒன்றிருப்ப தாகக் கொள்வதேன். அதனை அறியமுடியுமா?

நீலகேசி: பிரிந்தியங்களோ பிரித்துணரப்படவோ முடியாத காரணத்தால் பொருளில்லை என்றாகமுடியாது. உணர்ச்சி முதலிய கந்தங்களின் அடிப்படையாக உயிர்நிலை அல்லது அறிவுநிலை (போதம்) இருக்கவேண்டுவது விலக்க முடியாத

உண்மை.

மேலும் கந்தங்கள் பிரிந்தியங்காதென்றால், ஒன்றுக் கொன்று மாறான தீ, நீர், ஆகியவை ஒருங்கே இயங்கும் என்ற முரண்பாடு ஏற்படுகிறது.

ஒவ்வொரு மூலப்பொருளிலும் மற்ற மூன்றும் கலந் துள்ளன என்கிறீர்கள். அப்படியானால் அக்கலவை மூலப் பொருளிலும் அத்தகைய கலப்பு இருக்கவேண்டும். அக்கலப்பிற் கலந்துள்ள கலப்பிலும் அதனுட் கலப்பிலும் அவ்வாறாகி எல்லையற்ற குழப்பநிலை ஏற்படுகிறது. மூலப்பொருள் என்பதற்குப் பொருளே இல்லாமலாகிறது.

புத்தர்: அப்படி அன்று. ஒவ்வொரு மூலப்பொருளிலும் தன் பண்புமிகுந்து, பிற பண்புகள் குறைந்து இயல்கின்றன.

நீலகேசி: மிகுதிப்பண்புக்கு முன் குறைந்த பண்பு அழியும். அப்படியும் அவை ஒத்தியங்குதல் அரிது. மேலும் பொறியா