பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 28

லுணரப்படும் எட்டினப் பொருள்கள் அங்ஙனம் உணரப்படாத வற்றுடன் இயங்குவதெவ்வாறு? தவளையின் காற்சுவடு காற்றில் இருப்பது போலன்றோ இந்நிலை?

அறிவு செயலுக்கும், செயல் இன்ப துன்பங்களுக்கு L -மாகும் என்கிறீர்கள். அறிபவன், செய்பவன், நுகர்பவன் ஆகிய ஆன்மா இல்லை என்கிறீர்கள். அப்படியானால் இம் மூன்றும் தொடர்பற்றவையாக வன்றோ இருக்கவேண்டும். ஒன்று மற்றதற் கிடமாவது எவ்வாறு?

அறிவுக் கந்தம் ஆறனுள் ஒரே நேரத்தில் ஒன்று தானே உணர்விலிருத்தல் கூடும்? மற்றவை மறைவிலுள்ளன என்னின், மறைவில் வைத்துள்ள உள்ளம் அல்லது ஆன்மா ஒன்று இருத்தல் வேண்டுமன்றோ?

அறிவுக்குக் காரணம் விருப்பம் (இச்சை) என்கிறீர்கள். விருப்பம் அறிவுக்கு முந்தியதாகவே அது எங்கிருந்து எழு கிறது என்ற வினா ஏற்படுகிறது. உடலிலிருந்து என்றால் அறியாப் பொருளி (அசேதனத்தி) லிருந்து வந்ததென்றாகிறது. அது அறிவினின்று எழுந்ததாயின் காரியமே காரணமாகின்றது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளுறை அறிவு என்ற ஒன்றைக் கொள்கிறீர்கள். ஆனால் அது ஆன்மாவிற்கு ஒரு மறுபெயரேயன்றி வேறன்று.

புத்தக் கோட்பாட்டின்படி பொறியுணர்ச்சிகளுள் மணம், சுவை, ஊறு ஆகிய மூன்றும் பொறிகள் மீது பொருளுலகு தாக்குவதால் ஏற்படுகின்றன என்பது ஒத்துக்கொள்ளப்படுகிறது. நீலகேசி ஓசையும் அத்தகைய தாக்குதலாலேயே ஏற்படுகிறது என்று விளக்கினாள். (இது தற்கால அறிவியல் கொள்கையை வியத்தகு முறையில் நினைப்பூட்டுவதாகும்) ஓசை காற்றணுக் களினியக்கத்தால் உண்டாவதென்றும் அது ஒளியினும் வேகம் குறைந்ததென்றும் கூறி, அதனை எடுத்துக்காட்டினால் விளக்கு கிறாள். வண்ணான் துணி தப்பும்போது அவன் செயலைக் கண்கொண்டு பார்ப்பவருக்கு அச்செயலைப் பார்த்தபின் சில நொடிகள் கழித்தே அதனுடன் ஏற்படும் ஓசை செவியிற்படும். மேலும் கட்புலனுதவி யின்றியே ஓசையின் அண்மை தொலைவுகளையும் வரும் திசையையும் உய்த்துணரலாகும்.