பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

63

நொடிக் கோட்பாட்டின் முரண்பாட்டையும் நீலகேசி நன்கு விளக்கினாள். நொடிதோறும் பொருள்கள் அழிந்து மாறுவதானால் புத்தர் என்ற பெயரைச்சொல்வதற்குள் பல நொடிகள் ஆகி, ஒரு நொடியில் கேட்ட உணர்வு அழிந்து, பின் மறுநொடி உணர்வு ஏற்படும். தொடர்ச்சியுமிராது, தொகையாகக் கேட்ட கேள்வியுணர்வு மிருக்க முடியாது என்ற அவள் காட்டினாள்.

நீலகேசி: ஓசை என்பது பொருளன்று; போலித் தோற்றம் என்கிறீர்கள். ஓசைகளால் ஏற்பட்ட உங்கள் பிடக முதலிய நூல்களும், ஓசை வாயிலாகச் செய்யப்படும் உங்கள் அறிவுரைகளும் என்னாவது!

அறிவுக் கந்தமும் பெயர்க்கந்தமும் ஒரேவகைப் பொருள் குறிக்கின்றன. இரண்டுக்கும் புலனாவது ஒரு பொருளாயின், அவை இருபொருள்கள் ஆகா. ஒரு பொருளாயின் அறிவுக் கந்தம் பொருளற்றதாகிறது.

செயற் கந்தத்தில் அவா, வெகுளி, மயக்கம் ஆகிய மனத்தின் செயல்களும், பொய், குறளை, இன்னாச்சொல், பயனில் சொல் ஆகிய மொழியின் செயல்களும், கொலை, களவு, காமம் ஆகிய உடற் செயல்களும் கூறப்படுகின்றன. இப் பத்துத் தீமைகளுள் குடியும் பேரவாவும் இடம் பெறாதது ஏன்? மேலும் அவா தீமையாகுமானால், புத்த துறவியர் குடை, மிதியடி, குண்டிகை ஆகியவை வைத்துக் கொள்ளல் தகாதன்றோ? மெய்யறிவுடன் நோக்கினால் அவாவனைத்துமே தீமை என்று கூறுவதற்கில்லை. அது நன்மையாவதும் தீமையாவதும் அவாவிய பொருளின் தன்மையைமட்டுமே பொறுத்தது. வெகுளியோடு எவ்வகை யிலும் ஒப்பாகும் செருக்கு, மயக்கம் (மாயை), சிறுமை (லோபம்) ஆகியவற்றையும் தீமைகளாக எண்ணத் தவறிவிட்டீர்கள். உம் வாழ்க்கை வரலாற்றிலேயே இத் தீமைகளை அகற்றப் பாடுபட்டிருந்தும், உங்கள் சமயக்கோட்பாட்டில் இவற்றைக் கவனிக்காது விட்டுவிட்டீர்கள். மொழிச் செயல்களிலும் தீமை பயக்கும் மெய்ம்மை, புறங்கூறாது நேரிடையில் இழித்துரைத்தல், ஆகியவற்றை நீங்கள் ஒதுக்கத் தவறிவிட்டீர்கள். மேலும் தீமைகளை மனமொழி மெய் என முற்றிலும் பிரித்ததும்