பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 28

வழுவாகும். எல்லாத் தீமைகளிலும் மனத்தின் செயல் உண்டு என்பது தெளிவாக்கப்படவில்லை.

கொலைக் குற்றத்திற்கு ஐந்து கூறுகள் தெளிவுபட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள், செயலுக்காளானது உயிருடைய பொருளாயிருக்க வேண்டும். உயிருடையதெனச் செய்பவர் அறிந்திருக்க வேண்டும். கொல்லும் எண்ணம், கொலைச்செயல், ஆளான உயிர் இறத்தல் இத்தனையும் இருத்தல் வேண்டும். இவ்வைந்தில் எக்கூறு குறைபாட்டிலும் கொலைக்குற்றம் இல்லை என்கிறீர்கள். எனவே, நடைமுறை யில் வெற்றிபெறாத கொலைமுயற்சிகூடக் கொலையாகாது என்றாகிறது. ஆனால் உங்கள் நூலில் காந்திபாலன் (க்ஷாந்திபாலன்) என்ற துறவியைக் கொல்ல முயன்ற மன்னன் கலாகன் (கலாஹன்) நரகு சென்றதாகக் கூறப்படவானேன்?

உங்கள் பேரறவுரை (மகாவாக்கியம்) நான்கனுள், எல்லாமே துன்பம் (சர்வம் துக்கம்); எல்லாமே தூய்மை யற்றவை (சர்வம் அசுசி); எல்லாம் நிலையாதவை (சர்வம் அநித்யம்); எல்லாம் உயிரல்லாதவை (சர்வம் அனாத்மா) என்ற நான்கு உண்மைகள் கூறப்படுகின்றன. முதல் உரையின்படி நீங்கள் வற்புறுத்தும் நல்லறமும் நற்பயன் அற்றதாகும். இரண்டாவதன் படி உங்கள் மறை, போதி மரத்தடி முதலியவையும் தூய்மையற்றவையாகவேண்டும். மூன்றாவது வாழ்க்கைக் கொவ்வாதது. நொடிதோறும் எல்லாம் அழிவது உண்மை யானால், அரசன் உடைமைகளைப் பறிமுதல் செய்யும்போதோ, வெள்ளம் முதலியவற்றால் அழியும்போதோ, வருந்துபவர் நொடிதோறும் வருந்தாததேன்? மேலும் சமயத் தலைவராகிய நீங்கள் மறையும் நிலைப்ப தெவ்வாறு? கடைசி உரைக்கு மாறாக நீங்களே உயிர், மறுபிறப்புப்பற்றிப் பேசுகிறீர்கள்.அது வெறும் உலகியல் வழக்கு (வியவகாரப் பிரயோகம்) ஆனால் கூட உங்கள் பழைய நினைவுத் தொடர்ச்சி (பிரத்திய பிஜ்ஞை)க் கொள்கை யுடன் அது ஒத்துவராது.

மெய்ப்பொருள்களை, நாம் அவற்றின் பெயர் (நாமம்) உருவம் (ஸ்தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல்வகை (பாவம்) ஆகிய நாலுவகைகளால் அறியலாம். நீங்கள் கடைசிவகை ஒன்றுமட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள். முதல்