பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

65

மூன்றுவகைகளாலும் மட்டுமே ஆன்மா தெளியப்படும். வான்மலர் போன்ற தொடர்கள் இல்பொருள் குறிக்கின் றனவே எனின், வான். மலர் என்ற இரண்டும் உள்பொருள் களே என்றும், இல்பொருள் குறிக்கின்றனவே எனின், வான், மலர் என்ற இரண்டும் உள் பொருள்களே என்றும், இல் பொருள் என்பது தொடரின் முரண்பாடு மட்டுமே என்றும் காட்டலாம். பொருள் குறித்தே பெயர் எழுமாதலால், பெயர் பொருளின் அறிகுறியேயாகும்.

வினைப்பயன், வினையுலகு (சம்சாரம்) வீடுபேறு ஆகியவற்றை ஏற்கும் புத்தநெறியாளர் இவற்றுக்கு அடிப் படையான உயிர்நிலை (ஆன்மா) உண்டென்பதை மறுப்பது பொருத்தமற்றது என நீலகேசி கூற, அதை மறுக்கப் புத்தர் பிரான் கூறிய உவமைகள் பலவற்றுள் பொருத்தமின்மையை அவள் விளக்கிக் காட்டினாள். மேலும் வீடுபேறு என்பது வினை உலகுத்தொடர்பு அறுவதேயாயின், நொடிதோறும் அழிந்து புதிதாகும் உலகில், வீடுபேறுதான் நொடிதோறும் நிகழும் செய்தியாயிற்றே என்று நீலகேசி ஏளனம் செய்தாள். நொடி மாற்றுக்கொள்கையும், மாறுதலில் கொள்கையும் தவறு என்றும், உள்ளார்ந்த நிலைமையுமாகிய தொடர்ச்சியினிடையே மாற்றமாகிய நடுநிலைக் கொள்கையே நேர்மையுடைய தென்றும் அவள் விளக்கினாள்.

நீலகேசி அறிவின் திறத்தைக் கண்டு வியந்து, புத்த ருடைய குறைபாட்டை ஒப்புக்கொண்டு, இனி அவள் கூறிய உண்மைகளை ஏற்பதாகக் கூறினார்.

பிரிவு 6. ஆசீவக வாதம்

புத்தர் வாழ்ந்த கபிலபுரத்தினின்று அகன்று, நீலகேசி வான்வழியாக வென்றியஞ்செல்வனை (ஜினபகவானை)ப் பாடிப் பரவிக்கொண்டு சென்று, கோழியூரை (குட்குடநகரை) அடைந்தாள். அங்கே ஆசீர்வகர் என்ற சமயப்பிரிவினர். அவர்களையும் வெல்ல எண்ணி நீலகேசி, அவர்களுடைய ய ஆசிரியராகிய ாகிய பூரணரிடம் சென்று, "உங்கள் சமயம் எத் தகையது” என வினவினான்.