பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 28

நீலகேசி: உங்கள் சமயம் கண்ட தலைவர் யார்? உங்கள் மறை எது? உங்கள் சமயக் கோட்பாட்டின்படி அடிப்படை உண்மை, அல்லது உண்மைகள் எவை?

பூரணர்: எங்கள் சமயத் தலைவர் மஸ்கர் ஆவர். எங்கள் மறை நூல்கள் 'ஒன்பது ஒளிக்கதிர்கள்' எனப்படுபவை. எங்கள் கோட்பாட்டின்படி அடிப்படைப்பொருள்கள் ஐந்து. அவை ஐந்தும், ஐந்து வேறு, வேறுவகை அணுக்களாலானவை. அவை மண், புனல், அனல், காற்று, உயிர் என்பன.

உள்ளது அழியாது; அல்லத பிறவாத. ஆயின் உள்ளவை நீரில் மிதப்பவைபோன்று மேற்படத் தோன்றும்; அமிழ்ந்து கிடப்பவை போல மறைந்திருக்கும்.

எம் தலைவர்பெருமான் நிறையறிவுடையவர்; இரு வினைத் தொடர்பற்றவர். எனவே, அவரிடம் பேச்சும் செயலும் இரா. பேசினால்கூட வெளியிடமெங்கும் நிறைந்த அணுவுயிர்களுக்கு ஊறுவிளையும் என்பதனாலேயே அவர் பேசுவதில்லை. மூப்பும் இறப்பும் தவிர்த்தவர் அவர். வானவில்லின் தோற்றம் மறைவு ஆகியவைபோல, அவர் தோற்றமும் மறைவும், அறியவும் விளக்கவும் ஒண்ணாதவை. எனவே, அவரை யாம் நிறைவர் (பூரணர்) என்கிறோம். அவர் அருளிய மறைகளாகிய 'ஒன்பது கதிர்கள்' ஐவகை மெய்ப்பொருள்களாகிய உருப்படிகளை (மூர்த்தங்களை)ப் பற்றியும் தோற்ற மறைவுகளின் அறியொணாத் தன்மையையும் காரணமின்மையையும் விளக்கும்.

ஐவகை உருப்படிகள் வேறுவேறு இயல்புடையன ஆயின் பண்பற்றவை. மெய்ம்மைக்கு ஊறு, சுவை, நிறம், மணம் ஆகியவைமட்டுமே அவற்றுக்கு உண்டு. ஒசை என்பது கிடையாது. ஆனால் நீருக்குத் தண்மையும், தீக்கு வெம்மையும், காற்றுக்கு ஓசையும், உயிருக்கு உணர்வும் (போதமும்) உண்டு. இவையும் மூலப்பொருள்களின் அணுக்களின் குணங்களேயன்றி, அவற்றின் சேர்க்கையாலான பொருள்களின் பண்புகள் அல்ல.

கணங்கள் உண்டெனினும் தொடர்ச்சியான காலம் என்ற ஒன்றை நாங்கள் ஏற்பதில்லை.

எங்கள் ஒழுக்கமுறை, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட உலகியல் ஒழுக்கமுறையே. பிறர் இதுகண்டு