பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

67

நகையாடலாமாயினும், அதுவே உண்மையில் பகுத்தறிவுக் கொத்தமுறை என்பதை எண்பிக்கக்கூடும்.

நீலகேசி: உங்கள் கோட்பாட்டின் நான் ன் நான்கு கூறுகள் தலைவன், மறைமொழி, மெய்ம்மை இயல்பு, செயல்வகை (ஆப்தம், ஆகமம், பதார்த்தம், பிரவிருத்தி) என்பவை. நான்குமே கண்கூடு, உய்த்தறிவு ஆகிய இருவகை அளவைகளின் ஆதாரமற்றவை. தலைவர் வாளாமை (மௌனம்) பொருளற்றது; அறிவுமுறைக்கு முரணானது. அவர் வாய்திறவாத போது, உங்கள் “ஒன்பது கதிர்க” ளாகிய மறைமொழி தோன்றிய வகை யாது?

பூரணர்: அவை ஒக்கலி, ஓகாலி என்ற இரு தேவர் களால் அருளிச் செய்யப்பட்டவை.

நீலகேசி: அத் தேவர்கள் மறைமொழி அருளின், அவர்கள் நிறை அறிவுடையவர்களா? நிறை அறிவுடைய தலைவர்போல் அவர்களும் வாய்திறவாதிராததேன்? நிறை அறிவற்றவர் களானால், மறைமொழிகளின் வாய்மை குறைபடுகிறதே. குறையறிவுடைய நம்போலியரே அன்பு காரணமாகப் பிறருக்கு உதவ முன்வருகிறோம். நிறையறிவுடைய தலைவர் மஸ்கரி வாளா இருந்ததேன்?

தோற்றம் மறைவு ஆகியவை காரணமின்றி இயல்பாக நிகழ்பவை என்கிறீர்கள். ஆனால் தலைவர் தோற்றம் காரணமற்றதென்று விளக்க முன்வருகிறீர்கள். அதற்குக் கூறும் உவமையாகிய வானவில் விளக்கமே காரணகாரியத் தொடர்பு வகையில், உங்கள் அறியாமைக்குச் சான்றாகிறது. முகில்கள் மீது ஞாயிற்றின் கதிர்கள் விழுவதனாலேயே அது தோற்றுகிறது என்பதை நீங்கள் அறியவில்லை! வாளாமை நிறை அறிவுக்கு அறிகுறியாகுமானால் பேச அறியாக் குழந்தைகள், செவிட்டூமை கள், மரங்கள், குன்றுகள், நிறை அறிவுடையவையா? அவர் உறுப்பசைவுகூட அற்றவரானால் அவர் உயிரற்றவரா? பாசாங்குக்காரரா? பேசாத அவர், ஐந்து மெய்ப்பொருள் களியல்பு. இருவினையியல்பு ஆகியவற்றுக்கு விளக்கம் தருவாரா? செயலற்ற அவர் வாழ்வில் சிற்றின்ப வேட்கை புகுந்ததெவ்வாறு?

?