பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

||-

அப்பாத்துரையம் - 28

மூலப் பொருள்களில் மண்ணுக்கு மட்டுமே நிறம், சுவை, மணம், ஊறு உண்டென்கிறீர்கள். அடுத்த மூன்றுக்கும் அவை இருப்பதால் அவை மண்ணின் பாற்படுமா? அப்படியானால் மூலப் பொருள்கள் இரண்டாகவல்லவோ வேண்டும்? மேலும் வ்வுணர்ச்சிகளை உணரும் பொறிகளும் மண்தானா?

புலன் அறிவுக்கு உட்பட்டவற்றில் இருளும் ஒன்றா யிருக்க, அதை ஏன் பொருளாகச் சேர்க்கவில்லை?

மூலப் பொருள்களுக்கு இயல்பு உண்டு என்று கூறிய பின், பொருள்களுக்குப் பண்பு இல்லை என்றல் எவ்வாறு? இயல்பு பொருளிலிருந்து பிரிக்க முடியாதென்றாலும், அதை ஏற்பவர் பண்புகளும், பிரிக்க முடியாத நிலையில் ஏற்கப்படலா மன்றோ?

மெய்ம்மையின் மாறாத்தன்மை (அவிசலித நித்தியம்) பற்றிக் கூறுகிறீர்கள். மரம் படகாதலும், பொன் அணிகலனாவதும், வெண்கலமும் கிண்ணமும் மாறுதலல்லவா? வெண்கலத் திலேயே வெளிப்படையான தட்டை உருவும், மறைநிலையான கிண்ண உருவும் உள்ளன என்றாலும், உள்ளன என்றாலும், இரண்டும் வேறுவேறு பொருள்களாகி மாற்றம் ஏற்படுகின்றன என்று ஆகிறதே! இலக்கணத்தில் சொற்கள் கூட வேற்றுமையிலும் தொகை களிலும் மாறுகின்றன.

வளர்ச்சிமுறை வகையில் நீங்கள் நான்கு கூறுகளை ஒப்புக்கொள்கிறீர்கள். அவை வளர்ச்சியின் கட்டாயத்தன்மை, வளர்ச்சியின் படிமுறை, வளர்ச்சியின் உச்ச எல்லைநிலை, வளர்ச்சியின் கால அளவு ஆகியவை. அதாவது பெண்குழந்தை மாது ஆகமட்டுமே வளரமுடியும். சிறுமி, நங்கை, மங்கை, பேரிளம் பெண் ஆகிய படிகள் கடந்தே வளரமுடியும். கிழவிப் பருவத்துக்கப்பால் வளரமுடியாது. வளர ஐம்பது அல்லது நூறு ஆண்டுகள் வரை செல்லும்.

மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?

மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?