பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

69

குழந்தையின் வளர்ச்சியில் உருப்பெருக்கம் மாற்ற மல்லவா? ஒன்றரை அடிக் குழந்தை உருவிலேயே ஆறடி முழுவளர்ச்சியும் இருப்பதென்பது பொருந்துமா? மீசை தாடி முதலிய ஆண் உடற்கூறுகளும், கருப்பை முதலிய தாய்மை உறுப்புக்களுமாவது புது வளர்ச்சியாகிய மாறுபாடுகள் என்பதை மறுக்க முடியாதன்றோ?

உயிர்கள் (பாலைக்கனியின்

நிறமாகிய) நீலநிற

மென்றும், போதிய நீள அகலமும் நானூறுயோசனை உயரமும் உடையவை என்றும் கூறுகிறீர்கள். இவ்வளவு பெரிய அளவுடைய உயிர்கள், சிற்றளவுனவாகிய உடலில் அமைந்தி ருத்தல் எவ்வாறு? உயிர்கள் பல கோடியாதலால் அத்தனைக்கும் உலகில் இடம் ஏது?

உயிர், பூசணிக்காய் போன்று நீளம் அகலம் உயரம் அடையபருப்பொருளானால், அக் காயைப்போலவே துண்டு படக்கூடியதாயிருக்கவேண்டும். உயிர்கள் எல்லாம் வீடுபெற்றால், உலகியல் வாழ்வில்லையே என்ற கடாவுக்கு மறுமொழியாக, வீடுபெற்ற பின்னும் உயிர்கள் மீண்டும் உலகியலில்

தொடக்கநிலை யெய்தும் என்ற மண்டல வீடு பேற்று (மண்டல மோக்ஷ)க் கொள்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இது உயிர்கள் எண்ணற்றவை என்பதன் முழு இயல்பை அறியாமல் நீங்கள் தரும் விடையாகும். எண்ணற்றவையாகவே இருக்கும் என்ற கணக்கியல் மெய்ம்மையை நீங்கள் உணர வில்லை.

மூலப்பொருள்களுள் மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை என்றும், தீயும் உயிரும் மேல்நோக்கிச் செல்பவை என்றும், கூறுகிறீர்கள். மேல் நோக்குவதாகக் கொள்ளும் தீ, எரி நிலையிலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் பொருளே என்பதை நீங்கள் கவனிக்கவில்லை. உயிர்கள் தொடர்ந்து மேல் நோக்கு பவையானால், அவை திங்கள் மண்டிலம், விண்மீன் மண்டிலம் ஆகியவற்றை எளிதில் அடைய வேண்டுமன்றோ? பக்கநோக்கிச் செல்வதாக நீங்கள் கூறும் காற்று, உடலில் மேலும் கீழும் செல்வதை நீங்கள் கவனிக்கவில்லை.

காலமில்லை என்று என்று கூறும் நீங்கள், வளர்ச்சியின் கூறுகளுள் காலப்போக்கை ஒன்றாகக் கூறுகிறீர்கள்.