பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

II.

அப்பாத்துரையம் - 28

காரண காரியத் தொடர்பை மறுக்கும் நீங்கள், நோன்பும் தவமும் நாடுவதேன்?

நீலகேசியின் வாதத்தால் பொய்ம்மை தவிர்ந்த ஆசீவக ஆசிரியர் பூரணர், தன் குழப்பநிலையிலிருந்து விடுதலை தருமாறு வேண்ட, நீலகேசி தன் மறுப்புக்களுக்குத் தானே விளக்கம் கூறி, அவரைச் சமணநெறி மூலம் தேற்றினாள்.

பிரிவு 7. சாங்கிய வாதம்

பூரணரை நல்வழிப்படுத்தியதன் பின், நீலகேசி பூரணரது வேண்டுகோளுக்கிணங்க, பேர்போன சாங்கிய ஆசிரியர் பராசரர் வாழ்ந்துவந்த அத்தினாபுரத்துக்குப் புறப்பட்டாள். சாங்கிய சமயக் கோட்பாடுகளை விளக்கும்படி நீலகேசி கேட்க, பராசரர் அதற்கிணங்கினார்.

பராசரர்: எங்கள் கோட்பாட்டின்படி மெய்ந்நிலைகள் (தத்துவங்கள்) 25 ஆகும். அவை உயிர்நிலை(ஆன்மா) இயற்கை (பிரகிருதி), பெருநிலை (மகத்), செருக்கு (அகங்காரம்) புலன் (ஞானேந்திரியம்) ஐந்து, பொறி (கர்மேந்திரியம், ஜந்து, மனம், தன்மாத்திரைகள் ஐந்து, மூலப் பொருள்கள் (பூதங்கள்) ஐந்து ஆகியவை. அலகின் இறைவனாகிய தலைவன் (ஆப்தம்) செயலற்றவன். குணமற்றவன் என்றும் துய்ப்பவனேயன்றித் துய்க்கப்படான். மாறுதலற்றவன், வினைத்தொடக்கற்றவன், என்றுமுள்ளவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் உணர்பவன், யாவற்றையும் துய்ப்பவன். தலைவனைப்போலவே இயற்கையும் எங்கும் நிறைந்த உருவற்ற (அமூர்த்த) மாறுதலற்ற மெய்ம்மை: செயலற்றது, புலன்களால் அறியொணாதது, ஒருமையுடையது, மறைநிலையுடையது. இயற்கையிலிருந்து பெருநிலையது, மறைநிலையுடையது. இயற்கையிலிருந்து பெருநிலையும் அதனிடத்திருந்து செருக்கும், அதனிடமாக மனமும் தன் மாத்திரைகள் ஐந்தினின்றும் ஐம்பூதங்கள் தோற்றுகின்றன. இவ்விருபத்தைந்து மெய்ந்நிலைகளை அல்லால் வேறு மெய்ம்மை இல்லை.

நீலகேசி: ஆன்மா செயலற்றதென்று கூறுவது எவ்வாறு பொருந்தும்! காட்சியும் அறிவும் செயலும் ஒருங்கேயுடையதாய், ஓய்வு ஒழிவு இன்றி உணர்வு (போத) மயமாயிருக்கும்