பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

71

ஆன்மாக்கள் செயலற்றவையாகும் என்கிறீர்கள். பிறருக்கு அறிவு விளக்கம் செய்யப்புகும் நீங்கள் ஆன்மா அன்றோ? பிற உயிர்கள் ஆன்மாக்கள் அல்லவானால், உங்கள் அறிவுரை கேட்டு, அவை தம்மைத் திருத்தும் என்று எங்ஙனம் எதிர்பார்த்தல் கூடும்?

பராசரர்: ஆன்மா மூவகைப்படும். அவை பேரான்மா, உள்ளுரை ஆன்மா, வினையான்மா என்பவை. இவற்றுள் பேரான்மா ஒன்றுக்கே செயலில்லை. மற்ற இரண்டுக்கும் செயல் உண்டு.

நீலகேசி: இதுவும் பொருந்தாது. பொதுவில் ஆன்மா செயலற்றதென்கிறீர்கள். பின் ஒருவகை செயலற்றது, இருவகை செயலுடையது என்கிறீர்கள். இது முன்னுக்குப் பின் முரணல் லவா? இருவேறு இயல்புடைய இரண்டு, ஒரே பொருளின் ருவகைகளாதல் எவ்வாறு? மேலும் செயலுடையவையாய் உயிர்களின் செயலுக்குக் காரணமாய் இரண்டு ஆன்மாக்கள் இருக்கையில், செயலற்ற சோம்பேறி ஆன்மா ஒன்றுக்கு என்ன வேண்டுதல் ஏற்படக்கூடும்? செயலற்ற பேரான்மா, உடல்களிலும் உலகிலும் நின்று துய்ப்பதெவ்வாறு? எல்லாமறிந்த அப்பேருயிர் என்ன தீவினைப்பயனால் உலக வாழ்வில் சிக்குகிறது?

பராசரர்: ஆன்மாவின் செயலென்று நாம் கொள்வ தெல்லாம் ஆன்மாவின் செயலுமல்ல, பேரான்மாவின் செயலுமல்ல; இயற்கை ஆற்றலின் செயலேயாகும். தன்னிறமற்ற பளிங்கின் பின்னாலுள்ள பூவின் நிறம் பளிங்கில் தெரிவது போலவே, இயற்கையின் பண்பும் செயலும் ஆன்மாவில் பட்டொளிர்கின்றன. தன்னுணர்வுடன் கூடி 'நான்’ ‘எனது' என்ற முறையில் ஏற்படும் துய்ப்பெல்லாம் உண்மையில் செருக்கின் செயல்; அச்செருக்கு பெருநிலையினின்றும் பெருநிலை இயற்கையினின்றும் தோன்றியவை.

நீலகேசி: இயற்கை அறிவுணர்வற்ற பொருள். அத னின்று தோன்றிய பெருநிலை, செருக்கு முதலியவையும் அறிவுணர்வற்றவையாகத்தானே இருக்கமுடியும்? அறிவற்ற பொருளினின்று அறிவுப்பொருள் தோற்றுவதெங்கனம்?

இயற்கை உருவற்றது (பருப்பொருண்மையற்றது) காரியகாரணத் தொடர்பற்றது எனக் கொள்கிறீர்கள்.