பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

||-

அப்பாத்துரையம் - 28

அதினின்று தோன்றிய பெருநிலையோ உருவுடையது. காரியகாரணத் தொடர்புடையது. இங்ஙனம் உருவற்ற நிலையிலிருந்து உருவைப் பெறுவதைவிட, வெறுவெளியி னின்று பொருள்களைப்பெறலாகுமன்றோ?

புலன்கள், பொறிகள், மனம் முதலியவை தனித்தனி மெய்ந்நிலைகளாகக் கூடுமானால் கை, கால், மலங்கழிக்கும் உறுப்புக்கள், பிறப்பு உறுப்புக்கள் ஆகியவையும் தனிமெய்ந் நிலைகளாகாததேனோ? தாமாக ஒன்றையும் உணரமாட்டாத இவற்றைப்பொறிபுலனென்பானேன்? பொறிகள் செயல் உறுப்புக்களானால், அவற்றினும் தெளிவுபடச் செயலாற்றவல்ல உதடு, இடுப்பு, நாக்கு, பல் முதலியவற்றைப் பொறிகள் என்று கூறாததென்ன? ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய தன் மாத்திரைகள் உலகியற்பொருள்களுடன் தொடர்புடையவை யாயிருக்க, அவற்றைச் செருக்கிலிருந்து தருவிப்பானேள்? செருக்கு தன்னுணர்வின் பயனால், அதிலிருந்து உலகியல் பொருள்களின் தொடர்புடைய இத்தன்மாத்திரைகள் எப்படித் தோன்றும்?

ஓசை வானவெளியின் இயல்பென்கிறீர்கள். உருவற்ற தாய், உணர்வற்றதாய், எங்கும் நிறைந்த வானவெளியிலிருந்து உலகியற் பொருள்களின் உராய்வால் தோன்றும் உண்டாகிறது என்றல் பொருந்தாது.

உயிர் உடல் தொடர்பை விளக்க நொண்டிமீது ஊரும் குருடனை உவமை கூறுகிறீர்கள். உங்கள் முதனிலை விளக்கப்படி இது பொருந்தாது; ஏனெனில் இயற்கை, உயிர்நிலை ஆகிய இரண்டுமே செயலற்றவை என நீங்கள் கொள்கிறீர்கள். இது இரண்டு அலிகள் மணவாழ்வால் குழந்தை உண்டாவதாகக் கூறுவது போன்றது.

உயிரும்

உயிர்கள் பல அல்ல, ஒ ன்றென்றும்; இயற்கையும் எங்கும் நிறைந்தவை என்றும் கூறுகிறீர்கள். ஆகவே, இரண்டும் என்றும் இணைந்திருக்கவேண்டும். ஆனால், அவை என்றோ இணைந்து உலகு தோற்றுவதாக நீங்கள் கூறுவது தவறு. உங்களில் பல ஆன்மவாதிகள் கூறுவதைவிட, நீங்கள் பிறருக்கு அறவுரை பகர்கிறீர்கள். ஆன்மா ஒன்றேயானால் அறவுரை தரும்