பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

73

ஆசிரியர், பெறும் மாணவருக்கு இடம் எது? பலியாட்டில் (யாகத்தில்) உயிர்க்கொலை செய்தல் தற்கொலையன்றி வேறென்ன ஆகக்கூடும்?

படைப்பின் முன் பொருளில்லாது, படைத்தபின் புத்தம் புதிதாகத் தோன்றிற்று என்றால், படைக்கும் இறைவன் மட்டும் அங்ஙனம் தோற்றாதது ஏன்? இறைவன் செயலன்றி வேறு செயலில்லை என்றால், கொலையும் பழியுங் கூட அவன் செயலேயாதல் வேண்டும். ஓருயிர் வாதம் உண்மை யானால், கொல்வானும் கொல்லப்படுவானும், அறிவுடை ஆசானும், அறிவுக் குறையுடைய மாணவனும், மருத்துவனும் நோயாளியும், ஒன்றுபட்டு அறிவுக்குழப்பம் விளைகின்றது.

மாறா நிலையுடைமை (அவிசலித நித்தியம்) பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் வளர்ச்சிபற்றிப் பலபடக் கூறு கிறீர்கள். மாறுதலற்ற நிலையுடைய உலகில் வாழ்வு தாழ்வு இருக்கமுடியாது.

பராசரர் இவ்வளவும் கேட்ட, அல்லலற்றழுங்கி, மெய்ம்மை விளக்கம் கோரினார். நீலகேசி, உண்மை இன்மை இணைந்த இணைப்பே (அஸ்தி நாஸ்தி தத்துவமே) உலகின் அடிப்படை என்றும், பேரான்மா என்பது சமணர் சித்த பரமேஷ்டிக்குச் சரியான தாயினும், அறிவு முதலிய பண்பு களை உணர்வற்ற இயற்கையிடம் சுமத்தாது, உயிர்களின் இயல்புகள் என்று கூறுதல் நலம் என்றும் விளக்கினாள். இறுதியில் மும்மணி (இரத்தினத் திரயம்) விளக்கத்தால் பராசரர் விளக்கமுற்றார்.

பிரிவு. 8. வைசேடிக வாதம்

சாங்கிய ஆசாரியனை விடுத்து நீலகேசி, வைசேடிக சமயத்தலைவராகிய லோகஜிதர் குடிலை (ஆசிரமத்தை) அடைந்தாள். அவர் வைசேடிக முதல்வரான கணாத முனிவருடனேயே ஒப்பானவர் என்று சொல்லத்தக்க அளவு, அறிவாராய்ச்சியும் புகழும் உடையவர். அவர் தம் நெறியின் அடிப்படைக் கொள்கைகளை விரித்துக் கூறலானார்.

எங்கள் சமயக் கோட்பாட்டின்படி பொருண்மைகள் ஆறு. பருப்பொருள் (திரவியம்), பண்பு (குணம்). செயல் (கர்மம்),