பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

||-

அப்பாத்துரையம் - 28

தொகை (சாமான்யம்), வகை (விசேஷம்), கோப்பு (சமவாயம்) என்பன. அவற்றுள் பருப்பொருள்களாவன; மூலப்பொருள்கள் ஐந்து, திசை, மனம், காலம், உயிர் ஆகிய ஒன்பதும் ஆகும்.பண்பும் செயலும் பருப்பொருள்களைச் சார்ந்து நிற்பவை, தொகை பெருந்தொகை, உள்ளுறைதொகை என இருவகை. முன்னது பொருளின் உண்மை அல்லது இருப்பை உணர்த்தும், பின்னது பொருள்களில் உள்ளீடாக உள்ள பொதுப் பண்புகளைக் குறிக்கும். இத்தொகை என்றும் நிலையாய், பொருள்களின் ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகும். வகை வேற்றுமைகளுக்கு அடிப்படைக் காரணமாயிருப்பது கோப்புப் பொருள்களுடன் அவற்றுக்குரிய பண்புகளையும் செயலையும் இணைப்பது.முதல் மூன்று பொருண்மைகளும் மட்டும் தனி இருப்பு உடையவை. மற்றவை சார்பு நிலையின.

நீலகேசி: பருப்பொருள்கள் ஒன்பது என்று வகுத் திருக்கிறீர்கள் . அவற்றுள் மண், நீர் அனல், காற்று ஆகிய முதல் நான்கும் ஒருவகையே. உலகியல் மரபுப்படி நான்காம் எனில், மண்வகைகளும் பிரிக்கப்படவேண்டும்.

ரு

ஒரு வானியல்பாகக் கூறப்படுகிறது. ஆனால் அது பருப்பொருணணுக்களின் உராய்வால் ஏற்படுகிறது. வானில் இயல்பு என்பதைவிட, வெளியின் இயல்பு என்பது கூடச் சால்புடையது.எடைப் பருப்பொருள் தொடர்புடையது அன்று எனின், மணியை அடிப்பதனால் ஓசை உண்டாவதை என்னென்பது? வானம் பருப்பொருணன்று; அழியாதது; எங்கும் நிறைந்தது. ஆனால் ஓசையோ வரையறைப்பட்ட பரப்பும் கால எல்லையும் உடைய, பருப்பொருள் தன்மை உடையது.

திசை பருப்பொருளுடனோப்பத் தனிப்பொருளாகக் கூறப்பட்டது. ஞாயிறு முதலிய பொருள்களின் நிலைகளுடன் தொடர்புப் படுத்தினாலன்றி அது அறியொணாதது. அது இடவெளியின் ஒரு முறையேயன்றித் தனிப் பொருளன்று.தெற்கு மேற்கு என்ற திசையும், வலம் இடம் என்பதும், உறவு என்ற முறையிலும் தனி நிலையுடையவையல்ல. ஒன்றின் நிலை ஒன்றுக்குக் கிழக்கு என்றால், மற்றொன்றுக்கு மேற்கு ஆகும். ஒன்றுக்கு இடமுள்ள பொருள் மற்றொன்றை நோக்க, வலம்