பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

75

ஆகும். இவை பொருள்களின் பலவகைச் சார்பு விளக்கங்களோ (Predieals) அன்றி வேறல்ல.

மனம் என்பதும் ஆன்மாவின் இயக்கமேயன்றித் தனிப் பொருள் அன்று. மனம் தனி வகையில், அதனால் அறியப் படும் புல உணர்வுகளும், தனி நிலைகளாய்ப் பருப் பொருள்கள் என்பது ஆகாது, பதினான்கு ஆகும். காலம் என்பதும் இதுபோலப்பொருள்களின் இயக்கத்தினால் ஏற்படும் தொடர்புகளுள் ஒன்றே. குணம், செயல் ஆகியவை பொருளுடன் ஒன்றுபட்டே உயிருக்கு உணர்வளிக்கிறது. இவ்வுணர்வுக்கான கருவியே கோப்பு. இவற்றைத் தனிவகைகளாகக் கொள்ளின் உயிரும் பொருளும் இயக்கமற்ற பொருள்களாகின்றன. அறிவும் செயலும் உயிரின் இணையறாப் பண்பேயன்றி, கோப்பினால் ஏற்படும் தன்மைகளல்ல.

லோகஜிதர்: பண்பும் பண்பியும் ஒன்றானால், ஒன்று அழியும் போது மற்றதும் அழியவேண்டும். பச்சோந்தியின் நிறங்களுள் ஒன்றழியும்போது பச்சோந்தி அழிவதில்லையே. ஆகவே, இரண்டும் வேறு என்று ஏற்படுகிறது. மனிதனிடமிருந்து இளமை போயினும் மனிதன் அழிவதில்லை. முதுமைதாங்கி நிலைபெறுகிறான். சுருண்டிருந்த பாம்பு ஊரத்தொடங்கினால், சுருளுரு நீங்கும்; பாம்பு நீங்குவதில்லையன்றோ?

நீலகேசி: பண்பில்லாத பொருளில்லை. அது அறியப் படவும் முடியாது. அதோடு தனிப் பொருளாயின் பருப் பொருளிலிருந்து பிரித்துத் தனிவகையாகத்தான் கருதப்படு வானேன். பருப்பொருளிலேயே அடக்கப்படலாமே! உண்மையென்னவெனில், பொருள் தொடர்பும் நிலையும் உடையது. பண்புகள் அதனுடனும் தொடர்புடையவையாய் மாறும் இயல்புடைய தன்மைகள். இரண்டும் பொருள் வகையில் ஒன்று; தன்மை, தோற்றவகையில் வேறுபாடுடையவை.

பண்பும் செயலும் கோப்பினால் பொருளுடன் இணைவு உடையவை என்கிறீர்கள். இணைவு ஏற்படுமுன் அவற்றிற்கு நிலை ஏது? உள் பொருளாயின், பொருள் தொடர்பு இல்லாதபோது நிலைபெறுவது எவ்வாறு? இல்பொருளாயின், கோப்புக்கு உரியதாகாதே!