பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

77

ஒரே பொருளே தொகையாகக் கருதப்படும்போதும் சில பண்புகள் கருத்தில் முந்தும், வகைகளாகக் கருதப் படும்போது, அவை மறைந்து வேறு கருத்துக்கள் முன்வரும். தென்னையை மரம் என்று கூறும்போது மரப்பொதுப் பண்பும்,தென்னைவகை என்று கருதும்போது கிளியற்றது, இறகு

வடிவ

ஓலை முதலிய சிறப்புப் பண்புகளும் கருத்தில்

இடம்பெறும்.

நீலகேசி கூறிய உண்மைகளின் திட்டத்தை உணர்ந்து, லோகஜிதன் மனமாறி அவளுக்குத் தலைவணங்கிச் சமண நெறியே பெற்றான்.

பிரிவு 9. வேதவாதம்

அத்தினாபுரியிலிருந்து புறப்பட்டு, நீலகேசி பல கல்தொலைவு நடந்து, காகந்தி நகரை அடைந்தாள். அங்கே வேத நெறியாளர் கலைக்கூடம் ஒன்றிருந்தது. அதில் பூதிகன் என்ற வேத ஆசிரியன் பல மாணவர்கட்கு வேதநெறி புகட்டிக் கொண்டிருந்தான். நீலகேசி வேதநெறி பற்றி வாதிட வந்திருப்பதாகச் சொல்லவே. அவன் மாணவர் புடைசூழ முன்வந்து அவளிடம் வாதாடினான்.

பூதிகன்: எங்கள் முதனூல் வேதம் ஆகும். அது காலம் கடந்தது. தானே இயங்குவது. வேதத்தை மூலமாகக் கொண்டு பல மெய்ந்நிலை விளக்க மறைகள் ஏற்பட்டள்ளன. 25 மெய்ந்நிலை களைக் கொண்ட சாங்கியம், 6 பருப்பொருள்களை விரித்துரைக்கும் வைசேடிகம், படைப்பு முறை கூறும் படைப்பு வாதம் (சிருஷ்டி வாதம்), கடவுள் இயல்புரைக்கும் கடவுள்வாதம் (பிரமவாதம்), பல தெய்வங்கள் பெயரையும் கொள்கைகளின் பெயரையும் ஒட்டி ஏற்பட்ட வைணவம், மாகேசுரம், பாசுபதம், பாங்சராத்திரம், பரிவிராஜிகம் முதலிய முறைகள் ஏற்பட்டிருக் கின்றன. இவற்றிலும் உட்கிளைகள் பல. இவை எல்லாமே வேதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவை.

நீலகேசி: உங்கள் வேத நெறி அல்லது மீமாம்சகவாதம், கடவுள் மறுப்பு (நாத்திகச்) சார்பானது; எல்லா மறிந்த தலைவரை ஏற்பதன்று. ஆயினும் கடவுளையும் சிறு தெய்வங் களையும் வழிபடும் பல நெறிகளுக்கு அதனைத் தாயக