பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

|-

அப்பாத்துரையம் - 28

மெனக் கொள்கிறாய். பிந்தியவை சிறந்ததென உங்களுக்குத் தோன்றினால், உங்கள் கடவுள் மறுப்புக்கொள்கை வாய்ந்த வேத நெறியை விட்டுவிடுவதுதானே?

பூதிகன்: (கடுஞ்சினத்துடன்) யாரைக் கடவுள் மறுப் பாளர் என்றாய்! எங்கள் வேதம் யாவராலும் உரைக்கப் பட்டது அன்று (அபௌருஷேயம்) என்ற நிலையை உன்னால் அறியப்படமுடியாது. அதனைக்கற்கும் தகுதி சூத்திரச்சியாகிய உனக்கு ல்லை. அறியாத, அறியாத, அறியமுடியாத ஒன்றை ஆராய்ந்துரைக்க உனக்கு உரிமை ஏது?

நீலகேசி: நன்று சொன்னாய். நால்வகுப்புக்குப் புறம் பான சண்டாளர்கள்(பஞ்சமர்) கூட உங்கள் வேதமொழிகளை உரைத்திருக்கும்போது, அதனை அறிய ஒருவருக்குத் தகுதி இல்லை என்றுகூற வெட்கமில்லையா? வேதங்களை வகுத்தும் மந்திரந் தந்தும், முனிவர்கள் என்று உங்களால் கொள்ளப்பட்ட வசிட்டர், அகத்தியர், சக்தி, பராசரர், வியாசர், சுகர் ஆகியவர்கள் பிறப்பையும் மரபையும் ஓர்ந்து பார்க்க வேண்டும். வசிட்டரும் அகத்தியரும் நான்முகனுக்குத் தேவருலக நடனமாதான திலோத்தமையிடம் பிறந்தவர்கள். சக்தி வசிட்டருக்குச் சண்டாளமாதொருத்தியிடம் பிறந்தவர். பராசரர் சக்தி மகன். வியாசர் பராசரருக்கும் வலைச்சிக்கும் பிறந்தவர். வியாசர் தம் மூதாட்டியான திலோத்தமையிடம் பெற்ற பிள்ளை சுகர். இத்தகைய உயர் பிறப்பாளர் மொழிகளுக்குத் தெய்வத் தன்மை கற்பித்த நீங்கள், என் நல்குடிப் பிறப்பை இழித்துரைப்பது நகைக்குரியது.

என்பதற்கு

பிறப்பால் உயர்வு இழிவு இல்லை எடுத்துக்காட்டாக இவர்கள் பெயர்களையே எடுத்துக்கூறி, அவர்களை மேம்பாடடையச்செய்தது தவமே என்று உங்கள் நூற்களே கூறுவதை நீங்கள் உணரவில்லை.

பூதகர்: சரி போகட்டும். நீ வேதங்களிலிருந்து மேற் கோள் காட்டுகிறாய். தெய்வீகமென நாங்கள் கொள்ளும் அவ் வாய்மொழிகளுள் நீ யாதெனும் குறை காட்ட முடியுமா?

நீலகேசி: ஏராளமாகக் காட்டமுடியும். அவை மனிதர் வாய்மொழி என்பதற்கு அவையே சான்று பகர்கின்றன.