பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

79

அவற்றுட் பல நடைமுறைக்கு ஒத்துவாராதவை. பொய்யுரை கள் மலிந்தவை. அது பிற்காலத்தது என்பதற்கான தெளிவுக ளுண்டு. கீழ்வகை உலக ஆவல்களையே அவை வற்புறுத்து கின்றன. தீநெறிக்கு ஊக்குகின்றன. கொடுமை, கீழ்மை ஆகியவற்றுக்குத் துணை தருகின்றன.

பூதிகர்: இவ்வுரைகள் எவ்வாறு பொருந்தும்?

நீலகேசி: மனிதர் வழங்கும் மொழியில் பிற நூல்களிற் காணப்டும் அதேவகை பிறப்பு, நடை, சொல், எழுத்து ஆகியவற்றால் அமைந்து, தெய்வநூல் என்பதற்கான சிறப்புப் பண்பு எதுவும், இல்லாதிருப்பதனால் அத மனிதர் ஆக்கிய நூலே. தெய்வமே மாந்தர் நாவில் நின்று கூறியது எனக் கொண்டால், வேதமட்டுமென்ன, எல்லா நூல்களும் தெய்வத் தன்மை மிக்க ஆன்றோர் நாவில் தோற்றியதேயாகும். மேலும் வேதங்களைப் பற்றிக் கூறுகையில், பிருகதாரணிய உபநிடதம் பெரியோர்களால் கூறப்பட்டது (மஹதோ பூதஸ்ய நிஸ்வாஸிதம்) என்றே குறிப்பிடுதல் காணலாம். வேதங்களில் ஒன்று தித்திரியால் கூறப்பட்டதாதலால், தைத்திரி எனப்பட்டது. இதுவும் ஓர் ஆசிரியன் அருளியது எனக் கூறுகிறது. தித்திரி என்ற மனிதர்கூட அதே நூலில் குறிப்பிடவும் பெறுகிறார்.

பூதிகர்: வேதங்கள் யாரால் எப்போது அருளப்பட்டன என்று கூறப்படவில்லையே. பிற நூல்கள் அவ்வாறு குறிக்கப் பட்டன. ஆதலால், வேதங்கள் தொடக்க மற்றவை, தெய்வீகச் சார்புடையவை என்பது பெறப்படுகின்றது.

நீலகேசி: தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்க மற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு.

மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறை யறிவுக்குப் பொருந்தாதவை. இந்திரனும் சூரியனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்ரீவரைப்