பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 28

பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல், ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம் விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழி யாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் இவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. வை நடவாச் செயல்மட்டுமல்ல, நடக்க முடியாத செயல்கள் அறிவுப்பகுதியில் (ஞானகாண்டத்தில்) எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வினைப்பகுதியில் (கர்மகாண்டத்தில்)வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு, யானை பரிசு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது.யாக்ஞவல்கியர் சனகரிடம் தாம் வேள்வியில் முனைவது உண்மையறிவும் அவாவாலன்று, காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில் மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளரினும் கீழ்நிலையடைகிறது.வேளாண் செல்வன் ஒருவன் தன் புதல்வருள் ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செல்வனான குருக்கள், மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக உங்கள் சமய நூல்களே கூறுகின்றன.

உங்கள் மறைநூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. சௌத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சரிக்கையினால் பௌண்டரம் முதலிய