பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

81

வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில், கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக் கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்கு வதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக்கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையம் உண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பல பொருள்படக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம்தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற் படுகின்றன. எடுத்துக்காட்டாக 'அஜேநயஷ்டவ்யம்' என்ற தொடரில் அஜம் என்பதனை ஆடு என்று ஒருசாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொருசாராரும் பொருள் கொள்ளும்படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபரிசரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபரிசரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிரகஸ்பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக 'மாவிலங்கு' செய்யும் படி கூறுவதுகேட்டு, ஊனுண்ணும் விருப்புடன் வேள்விக்கு வந்த ‘தேவர்கள்' வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதரிக்க, இருவரிடையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச் சான்று மீறித் தேவர்புறம் தீர்ப்பளிக்க நரகடைந்தான்.

இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் ‘மா அரிசி' முதலிய படைப்புகளாலேயே முனிவர் களால் தொடக்கத்தில் செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர் கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் வ்வளவு என்பது வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத்