பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 28

தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக் கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம்.

பூதிகர்: நீங்கள் உங்கள் சமயத்துக்கு வேதத்தில் ஆதாரங் காட்டுவதானால் உங்கள்

குறிப்பிடப்படவேண்டும்.

றைவனாகிய அருகன் அதில்

நீலகேசி: ஆம், இருக்கு வேதத்திலேயே,

"Arhan bibarshi Sayakani Danvan

Arhatu Viswaroopam

Arhat Brahmi

Arha Eva Itham Sarvam

Eth Bootham Yach Abavyam

Ya Yevam Veda"

முதலிய வாசகங்கள் உள்ளன. இதேபோன்று வாய் மொழி(ஆகமங்கள்) அருளிய இறைவன் நிறையறிவினன் என்று சமணர் கொள்வது போலவே வேதங்களும்,

"Savetti Viswam Na Hi Thasya Vetta Thamahu ragriyam Purusham Mahantam and Hiranyagarbasarvagnaha”

என்று கூறுகின்றன.

எல்லா மக்களும் நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள், உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல் இழிவும் ஆம் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலேயே உயர்வு தாழ்வு ஏற்படுமா? மேலும் உங்கள் நூல்களிலேயே திருமால் தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும் காலில் பிறந்த கங்கை தூயதாகவும், உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மத கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறதே.

வேதங்களை வரையறையின்றிப் புகழும் நீங்கள், உங்கள் கொலைவேள்விக்கே இடம் தேடுகின்றீர்கள். வேதங்களை