பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

87

உழையாமை, உழைப்புப் பயிற்சியின்மை அவர்களறியாமலே அவர்கள் தனி வறுமை ஆகிறது!

வறுமையிற் செம்மை நாடிய மாது வீட்டுக் கடமைகளைப் புறக்கணிப்பவளாயிருந்தால், ஒவ்வொரு நாளும் அக்கடமை அவள் கழுத்தில் தொங்கவிடப்பட்ட ஒரு கல்லுருளையாய் அவளை அழுத்தாதிராது. வறுமை பெருகி அவள் சாவு நோக்கித் துன்பப் பாதையிலே விரைவாள். தன்னலத்தின் பயன் சாவு என்ற மேற்காட்டப்பட்ட நாலடிப் பாடலின் மெய்ம்மைக்கு அவள் சான்றாய்விடுவாள். ஆனால் தன்னலமற்ற சேவை ஒன்றின் மூலமே அவ்வணங்கு சுமைகளனைத்தையும் கைவிட்டு எளிய, சுமையற்ற நல்வாழ்வு வாழ்ந்து, இன்ப நோக்கிப் படிப் படியாக, முன்னேறுகிறாள். தன்னல மறுப்புக் உடன்பிறப்புப் பண்புகளாக மகிழ்வும் உளக்கிளர்ச்சியும் இயல்கின்றன. ஏனெனில் தன்னல மறுப்பு உழைப்புக்கு ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் தந்து அதைக் கசப்பான கடமை என்ற நிலையி லிருந்து உயர்த்தி ஓர் இனிய இன்பப் பயிற்சியாக்கிவிடுகிறது. செல்வத்துள் வறுமைத்துயர் மேற்கொள்பவர்

மேலே குறிப்பிட்ட வறுமையிற் செம்மைநெறி பின்பற்றிய மாதினுக்கு மாறான மற்றொரு மாதின் வாழ்வையும் நாம் காண்டல் பயன்தருவதாகும். அவள் வறுமைச் சூழலுக்குரிய வளல்லள், மட்டான செல்வ வாழ்வுடையவளே. தேவைக்குப் போதிய வாய்ப்பு மட்டுமன்றி, ஓய்வுச் செல்வமும் இன்ப வாய்ப்புக்களும்கூட அவளுக்கு மட்டான அளவில் உண்டு. ஆனால் அவளால் செய்யப்பட வேண்டியதாக அமைந்துள்ள சில சமுதாயக் கடமைகளை அவள் செய்ய விரும்பாது வெறுக் கிறாள். அக்கடமைகள் அவள் உள்ளத்தை உறுத்துகின்றன.

அவள் சில சமயம் அவற்றைச் செய்யாது விடுகிறாள். ஆகவே அவை அவளை எப்போதும் ஓய்வொழிவின்றி உறுத்து கின்றன. நாள் செல்லச் செல்ல உறுத்தல் மிகுதியாகவும் வளர்கிறது. சிலவற்றை அவள் வேண்டா வெறுப்புடன் செய் கிறாள். செய்யும்போதும் அவள் மனக் கசப்புடன் செய்கிறாள், செய்து முடிந்த பின்னும் அவள் மனக்கசப்பும் அதனால் விளைந்த சூழல் மாறுதல்களும் அவளை உறுத்தாமல் விட வில்லை. வேறுசில செயல்களை அவள் செய்யாமலே நாட்