பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 29

கடத்தி, இனி நாட்கடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்ட பின்பே செய்கிறாள். இதனால் நாட்கடத்தும் சமயத்திலும் சரி, இறுதியில் செய்யும் சமயத்திலும் சரி, அவள் மனக்கசப்பு மாறுவதில்லை. செய்து முடிந்த பின்னும் மனக்கசப்பும் மற்றச் சூழல் விளைவுகளும் பெருக்கமுறுவதன்றி மாய்வதில்லை, தேய்வதில்லை.

பணமிருந்தும் செலவு செய்ய வேண்டிய சில இன்றி யமையாக் கடமைகளில் செலவு செய்ய மனமில்லாமல், பணமில்லா ஏழையைப் போலவே அவள் செலவு செய்யாமல் இன்னலுக்கு ஆட்படுகிறாள். செலவு செய்ய நேர்ந்துவிட்டாலும் அவள் மனக்கசப்பு இரட்டிக்கவே செய்கிறது. இவ்விடங்களில் அன்பற்ற நெஞ்சம் நாமறியாமல் நமக்கே பகையாகிவிடுவது காணலாம்.

சில சமயம் தன்னிடம் இருக்கும் பணத்தாலோ அல்லது அதற்கு இரட்டி மூவிரட்டி பணத்தாலோ - உண்மையில் எந்த அளவான பணத்தினாலுமோ - கிட்ட முடியாத பொருள்களில் அவாக் கொண்டு, அவற்றுக்காகப் பணம் செலவிட்டு அவள் உளமாழ்குகிறாள். அந்த எட்டாப் பொருள் கிட்டாவிட்டாலும் அவள் துன்பம் பெரிது. கிட்டினால்கூட அது குறைவதில்லை. ஏனென்றால் அது அவாப் பெருக்குமேயன்றி அவாநிறைவு அல்லது உளநிறைவு உண்டுபண்ண முடியாது. பொதுநல அவாத் தோன்றும்வரை அத்தகைய நிறைவு எவருக்கும் ஏற்பட முடியாது என்பதை இது காட்டும்.

மேற்கூறப்பட்ட இரு அணங்குகளின் வாழ்வே கிட்டத் தட்ட எல்லா வாழ்வுகளுக்கும் உரிய மூல வகை மாதிரிகள் ஆகும். நருக்கடிகள் முன்னைய வாழ்வில் தாமாகத் தளர்ந்து போவதையும், பிந்திய வாழ்வில் அவை எல்லையற்றுப் பெருகுவதையும் நாம் தெளிவாகக் காணலாம். இரண்டு இடங்களிலும் நெருக்கடி என்பது புறச்சூழலைப் பொறுத்த தன்று, அகச் சூழலைப் பொறுத்ததே யென்றும்; அந்த அகச் சூழல்கள் தன்னலம், பொதுநலம் ஆகிய இரண்டுவகை வேறு பாடுகளினாலேயே அமைவன என்றும் உணர்தல் அரிதன்று. தன்னலம் நெருக்கடிகளை வரவழைத்து வளர்க்கிறது. பொது நலம் நெருக்கடிகளை அகற்றவும் தளர்த்தவும் பயன்படுகிறது.