பேரின்பச் சோலை
89
நருக்கடிகளின் கடுமை, எளிமை, வாழ்வின் வெற்றி தோல்வி, இன்ப துன்பம், புகழ் இகழ் ஆகிய யாவும் தன்னல அவா, பொதுநல அவா ஆகிய இரண்டன் வேறுபாடுகளேயன்றி வேறல்ல.
பண்பு, அருள், சான்றாண்மை
-
சமயவாணர் பலர் - சிறப்பாகச் சமய அறிவு நூலாராய்ச்சி யிலோ, மறைநூற் சிந்தனையின் நுட்பநுணுக்கங்களிலோ பயின்ற சமயவாணர் எளிதில் கண்டுணராத மெய்ம்மை இது. இத் தகையவர் தம் வாழ்நாளின் பெரும் பகுதியையே இவ்வாறான ஆராய்ச்சிகளில் செலுத்துவர். அதனால் பாரிய அறிவுக்கடல் களாகவும் விளங்குவர். ஆனால் அப்போதும் அவர்கள் அறிவு அவர்களுக்குத் தங்கள் வாழ்வு பற்றிய கழிவிரக்கத்துக்கே வகை செய்துவிடுகிறது! “அந்தோ! நான் ஒரு மனைவியை மணந்து ஒரு குடும்பத்தை வளர்த்துக் கால்கட்டாகக் கட்டிக் கொண்டேனே! இப்போதிருக்கும் அறிவு பல ஆண்டுகளுக்கு முன்பே இருந் திருந்தால், நான் மாயையில் சிக்கி ஒரு பெண்ணை மணந்து கொண்டிருக்கமாட்டேனே! இப்போது என்ன செய்வது?” என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைக் காண்கிறோம்.
ய
உலகமெலாம் தன் குடும்பம் என்று கருதும் மெய்த்துறவு நிலை பூண்ட அகச்சமயவாதிகள் அல்லது உண்மைச் சமய வாதிகள் எங்கே, ஒரு குடும்பத்தின் பொறுப்புக்கே கலங்கும் இந்தப் போலித்துறவு பற்றிய சழக்குரைகள் பயின்ற புறச் சமயவாதிகள் அல்லது பொய்ச்சமயவாதிகள் எங்கே? கழிவிரக்கத்தில் செல்லும் நேரத்தையும் செயலற்ற அவச் சிந்தனையையும் புதிய மெய்யுணர்விலும் புது முயற்சியிலும் புத்தாக்கத்திலும் செலுத்தும் கருமவீரர் எங்கே, வாழ்வின் முடிவிலும் ஆராய்ச்சியின் முடிவிலும் கூடக் கழிவிரக்கமன்றி வேறு ஏதும் கல்லாத இத்தகைய கோழை வேதாந்திகளெங்கே? கடவுள் பெயர் கூறக்கூட நேரமில்லாது கடவுட் பண்பை வளர்க்கும் கடவுட் பெரியார் எங்கே, கடவுட் பெயர் கூறி மனிதப் பற்றிலும் மனிதப் பண்பிலும் குறைவுறும் இக் ‘கல்விக் கற்றுக் கற்றுக் கருத்தறியா' மாக்கள் எங்கே?
கழிவிரக்கம் கொள்பவர் பெருஞ்செயல் தகுதியற்றவர். வாழ்வில் எல்லாருக்கும் உரிய இனக்கடமையின் பொறுப்பையே