106
அப்பாத்துரையம் - 29
சூழலை மறுப்பது அவர்களுக்கு எளிதாகவும் பயனுடைய தாகவும் தோற்றுகிறது.
முதல் தொடக்கத் துறவு
உன் பழிகளில், பிழைகளில் மிக மோசமானது எது? உன் உள்ளத்தின் உரங்குன்றிய, தளர்ச்சி மிகுந்த கூறு எது? உன் பண்புகளில் மயக்க மருட்சிகளுக்கு மிகுதி ஆளாகும் பகுதி எது? உன் முதல் தன்மறுப்பை அதில் தொடங்கு, அதுவே உன்னை முழு அமைதிக்கு இட்டுச் செல்லும் தன்மறுப்பாய் இருக்கும். சில சமயம், சிலரிடம் அது கோபமாய் இருக்கலாம். சில சமயம் சிலரிடம் அது அன்பிலாக் கடுகடுப்பாய் இருக்கலாம். அப்படி யானால், அந்தக் கோப உணர்ச்சியைத் தடுத்து நிறுத்த, படிப்படியாகவேனும் கைவிட நீ துணிவாயா? உள்ளத்தின் அன்பின்மையால் ஏற்படும் கடுகடுப்பான தோற்றத்தை, சொல்லைத் தடுத்தாண்டு ஒழிக்க, அந்த அன்பின்மையையே படிப்படியாக அன்புக் கனிவாக்க முனைவாயா?
அவ்வழியில் உனக்குத் தடையாக, உன் தளர் பண்பு களுக்குத் துணையாகத் தோற்றும் சூழல்களை எல்லாம் பொறுமையுடன் தடுத்தாள்வாயா? உன் கோபத்தை, கடு கடுப்பைக் கிளற, வசை, எதிர்ப்பு, குற்றச்சாட்டு, சுடுசொற்கள் வீசப்படலாம். இவற்றுக்குப் பதிலுக்குப் பதில், சரிக்குச் சரி செய்யும் எண்ணத்தில் உன் வழக்கமான, உனக்குச் செய்தற் கெளிதான, விடுத்தற்கரிதான செயல்களில், பண்புகளில் நீ சறுக்கிவிடாமல் விழிப்பாய் இருக்க முடியுமா?
சால்பு
வை மட்டுமல்ல! சுடுமொழிகளை எதிர்த்து நீ சுடு மொழிகள் கூறாமலிருந்தால் போதாது. அத்தகைய சுடுமொழி களுக்குரிய எண்ணங்கள், உணர்ச்சிகள் இல்லாமலிருந்தால் கூடப் போதாது. சுடு சொற்களுக்கு எதிராகக் கனிந்த அன்புச் சொற்கள் கூற உன் நா உவந்தெழ வேண்டும். அப்போதுதான் உன் துறவு முழுநிறை துறவாகும், நிலையான துறவாகும். பகைமைக்கெதிராக நீ பகைமை காட்டாதே, எண்ணாதே. அன்பு காட்டு, நட்புத் திகழ வை. பகைமை காட்டுபவர்களுக்குக் கேடு வராமல் பாதுகாக்க விரை. உன் பண்பு நிறைவு, சால்பு அதுவே.
க