பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(134) ||.

அப்பாத்துரையம் - 29

யாரிடமேனும் பற்றுக் கொண்டிருந்தால், அத்தகைய மனிதனைக்கூட நீ சரிவர அறிந்து கொள்ளலாகாது. ஏனெனில் உன்னிடமுள்ள குறையை நீ அவனிடம் காணப்போவதில்லை.

பிறரை உள்ளவாறு அறிந்துகொள்ளுவதற்குள்ள இந்தத் தடங்கல்களை எல்லாம் விலக்கினால்தான் ஒத்துணர்வு கைவரத் தக்கது. அப்போதுதான் மனிதரைச் சரியானபடி அறியும் அறிவின் மீது அந்த ஒத்துணர்வு அமைய முடியும். அவ்வறிவு தவறாயிருந்தால், மனிதர் இயல்பான பண்புகள் உருத்திரிந்து விகற்பமுற்றால், ஒத்துணர்வுக்கு இடமிராது.

மற்றவர்களை உள்ளவாறறிய வேண்டுமானால் நீ உன் விருப்பு வெறுப்புக்கள் சார்ந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டும். தப்பெண்ணங்கள், தற்பெருமைக் கருத்துக்கள் உனக்கும் அவர்களுக்கும் இடையே வந்து மறைக்கும்படி விடக்கூடாது. அவர்கள் செயல்கள்மீது சீற்றமோ, அவர்கள் நம்பிக்கைகள், கொள்கை கோட்பாடுகள்மீது கண்டனமோ கொள்ளும் உரிமை உனக்குக் கிடையாது.தற்காலிகமாகவாவது நீயெனும் தன்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர்களின் நிலையை மேற்கொண்டு அவர்களை மதிப்பிட்டுணர வேண்டும். இம்முறையிலேயே நீ அவர்களுடன் நேருக்குநேர் உறவு கொண்டு அவர்கள் வாழ்க்கை, அனுபவங்கள், நோக்கம் ஆகிய வற்றை உணர்ந்துகொள்ள முடியும்.

எந்த மனிதனையும் இவ்வாறு உணர்ந்தபின் யாரும் கண்டிக்க முடியாது. மனிதர் ஒருவர்பற்றி ஒருவர் தவறான முடிவு கொள்வதும், கண்டிப்பதும், வெறுப்புடன் ஒருவரிடமிருந்து ஒருவர் ஒதுங்கி வாழ்வதும் யாவும் இத்தகைய முழுநேரறிவு இல்லாததால்தான்! தன்னடக்கமும் தன் தூய்மையும் அற்ற எவரும் இந் நேரறிவு இல்லாதவரே.

வேற்றுமைகள் பண்புசார்ந்தவையல்ல, அளவு சார்ந்தவையே

உயிர்வாழ்க்கை என்பது ஒரு வளர்ச்சி, உள்முதிர்ச்சி, மலர்ச்சி. ஆகவே ஒரு பழிகாரனுக்கும் நிறைஞானிக்கும் அடிப் படையில், பண்பில், வேற்றுமை கிடையாது. இன்றைய ஞானி