பேரின்பச் சோலை
139
அறிந்தும் அறியாமலும் அன்பின் கதவைப் பிறர்மீது அடை ப் பவர் தாமே தம் இன்ப வாழ்வின் கதவை அடைத்து, தம் குறுகிய தன்னலமாகிய இருட் குகையில் தம்மைத் தாமே தள்ளிக் கொள்கின்றனர்.
36
'ஒத்துணர் வின்றி ஒருசிறு தொலைவும் தத்தம் வாழ்வில் தத்தி நடப்பவர் தத்தி நடப்பவர் அல்லர்கல் லறைக்கே செத்த பிணமெனச் செல்பவர் ஆவர்.’
ஒத்துணர்வு வரம்பற்றதாகும் நிலையே வாய்மையின் தோற்ற முடிவற்ற பேரொளி தோன்றும் நிலை. கட்டற்ற அன்பு நிலையே பேரின்பம் நிலவும் இடம் ஆகும்.
ஒத்துணர்வே பேரின்பம். அஃது அப்பழுக்கற்ற, தூய, உச்ச உயர் அன்பு நிலையிலேயே திகழ்ந்தொளி வீசுவது. கட்டற்ற பாச நிலையிலேயே அதை ஒருவன் நுகர முடியும். அது தொட்டதை யெல்லாம் தன்வயமாக்குவது. நான், நீ என்ற வேற்றுமை யற்று, கொள்பவன், கொடுப்பவன் இருவரும் ஒருநிலையடைய வழிவகுக்கும் அவ்வொளி தெய்வத்தன்மையுடையது.ஏனெனில் அது கதிரவனொளிக்குக்கூட இல்லாத பண்புடையது.
கதிரவன் ஒளி ஏற்ற பொருள்களெல்லாம் கதிரவனாய் ஒளி வீசுவதில்லை. அவை நிழலுண்டு பண்ணுவதன் காரணம் அதுவே. ஆனால் வரம்பற்ற அன்பென்னும் பேரொளி தொட்ட தெல்லாம் வரம்பற்ற பேரொளி, கதிரவனொளி ஆகிறது. அஃது எல்லாப் பொருள்களையும் ஊடுருவி எல்லாம் கடந்தும் ஆற்றல் குன்றாது நிலவுகின்றது.
ஒத்துணர்வின் உயிர்வளம்
மற்றவர்களைப் பற்றிய நம் கருத்துக்களில் நம் தன்னலம் கலக்காமலிருந்தால்தான் நாம் அவர்களிடம் உண்மையான ஒத்துணர்வு கொள்ள முடியும். இந்த நிலை அடைந்துவிட்டபின் நாம் அவர்களை அவர்கள் நிலையிலேயே காணலாம். அவர்கள் பழிகள், மருட்சிகள், துயர்கள் ஆகியவற்றையும் அவர்கள் நம்பிக்கைகள், கருத்துக்கள், தனிமனக் கோட்டங்கள் ஆகிய வற்றையும் கண்டுணரலாம். அவர்கள் அகமலர்ச்சியின் படியை