பேரின்பச் சோலை
151
சமுதாயம் உருவாக்கும் மொழியில் அதற்கு ஒரு சொல் இருக்க முடியும் என்றுகூட நாம் எதிர்பார்க்க முடியாது.
நாகரிக வாழ்வின் அடிப்படை வலிமையன்று, இனவலிமை, அன்புக் கூட்டுறவு.
உயிர்வாழ்வு என்பது வலிமையின் வளர்ச்சி, வலிமை கேட்டின் அழிவு என்று பலர் - அறிஞர் - இயல் நூலறிஞர் கூட எண்ணுகின்றனர். வலிமை என்பதன் பொருள் இனவலிமை ஆயின் இது தவறன்று, சரியே. ஏனெனில் இனத்திலுள்ள இனவலிமைப் பண்பையே நாம் தனி மனிதரிடத்தில் அல்லது தனியுயிரிடத்தில் நற்பண்பு என்கிறோம். இனத்திலுள்ள இனவலிமை கேடுதான் அற்பண்பு அல்லது தீயபண்பு அல்லது தீமை. ஆனால் வலிமை என்பது இனவாழ்வுடன் தொடர்பற்ற தனி மனிதன், தனி உயிர் வலுவானால், செல்வம், இன்பம், அறிவு என்பவற்றின் வகையிலும் இதே பொருள் கொள்ளப்பட்டால், இன வாழ்வு அஃதாவது நாகரிகம் என்ற சொல்லே பொருளற்ற சொல்லாய்விடும்.
வலிமையின் பயன் போட்டியில் வெல்லுதலானால், தாய் தந்தையர் தம் சேய்களை வளர்ப்பதற்கு மாறாக அழிக்கவே செய்தல் இயல்பு. இளைஞர் இளநங்கையர் முதியோர்களைப் பேணுவதற்கு மாறாக அவர்களைப் புறக்கணிப்பது அல்லது அழியவிடுவதே பொருந்தும். உண்மை என்னவெனில், மனித சமுதாயம் போராட்டப் பண்பின் அடிப்படையாகவோ, வாணிகப்பண்பின் அடிப்படையாகவோ வளரவில்லை. ஆனால் அந்த அடிப்படை அதில் உண்டு, அதுவே அதன் விலங்கியல் அடிப்படை. அதைத் தாண்டி, அதை எதிர்த்தே அது வளர்கிறது. அதன் மூல அறியாமைப்படி போராட்ட, போட்டிப் பண்புகள். அதன் வளர்ச்சியின் வித்தும் வளர்ச்சிப் போக்கும் திசையும் வளர்ச்சிக் குறிக்கோளும் அகவாழ்வு, இன்பவாழ்வு, அன்பு, மெய்யுணர்வு நோக்கியது. இவ்வளர்ச்சிப் பண்பு கூட்டுறவை அடிப்படையாகவும் முறையாகவும் உயிரிலக்காகவும் கொண்டதேயாகும்.
666
வாழ்வெல்லாம் ஒன்று, ஓர் இணைப்பு ஓரினமாக இயங்கும் ஓர் உறவு”