பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

171

இவற்றின் வேர்ப்பண்புகளாகிய தற்பெருமையோ, செருக்கோ மீண்டும் தலைகாட்டவே மாட்டா.

அச்சமும் வீரமும்

புண்படுவதும் புண்படுத்துவதும், துன்புறுவதும், துன் புறுத்துவதும் ஒருங்கே நிகழும் செயல்கள் - ஒரே செயற் பண்பின் இருமுகங்கள், இருதிசைகள். எனவே ஒருவன் பிறர் செயல் களால் புண்படாத உள அமைதி பெற்ற அன்றே, அவன் பிறரைப் புண்படுத்தாத நிலையை, பிறரிடம் அன்புக் கனிவு காட்டும் நிலையை அடைகிறான். பிறரைப் புண்படுத்தத் தயங்கும் அவன் செயலே அவன் தன்னையும் தன்னலத்தையும் மறந்து, பிறரையும், பிறர் நலத்தையும் பேணும் செயலாகி விடுகிறது. அவன் தோற்றமும் சொல்லும் செயலும் பிறரிடம் அன்பையும், அருளிரக்கத்தையும் தூண்டுகின்றன. பகைமை, பூசல் பண்புகள் நிலவும் சூழலில்கூட அஃது அவற்றின் அழிவாற்றலைத் தணித்து, மெல்ல நற்பண்புகளைப் பரப்புகிறது.பகைமையற்ற அவனிடம் பிறந்த அன்பலையே புதியதாக வீரம் என்ற நல்லாற்றலையும் தோற்றுவிக்கிறது.

தற்பெருமை, தற்செருக்ககற்றி மன அமைதியை அடைந்தவன் பிறர் செயலால் புண்படாதது போலவே, அச்செயல்கள் கண்டோ, செயற்பண்புகள் கண்டோ அஞ்சுவதில்லை. ஏனெனில் அச்சம் என்பது தன்னைப் பற்றிய எண்ணம். அது தற்பெருமை, தற்செருக்கின் அடிமை வடிவமேயாகும். அச்சமும் அடிமையும் அகன்ற அன்பு வீறுதான் உண்மை வீர உணர்ச்சி ஆகும்.

அன்பில் பிறந்த வீரப்பண்பு பொதுவாக வீரம் என்ற சொல் தவறாகக் குறிக்கும் அழிவுப் பண்பு அன்று. பகைமையிலிருந்து, சீற்றத்திலிருந்து தோற்றும் அப்போலி வீரம் உயிர்ப்பண்பன்று. அது நேர் எதிரியிடம், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே எதிர் செயல் தூண்டும். அதுவும் பகைமை சார்ந்த அழிவாற்றலே! அன்பு வீரமே, அன்புக்குரியாரிடம் மட்டுமன்றி, சூழ்திசைகள் எங்கும் அலை பரப்பிச் செயலாற்றும். அது நிலையானது, அமைதியுடையது. கோப ஆற்றலைப் போலக் கண நேரம் அழிவாற்றலாகிப் பின் தானே அழிவதன்று. அஃது