பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. தீங்கு நாடாமை

'திண்ணியது, திண்ணியது பேருலகம், ஊனக் கண்களுக்கே, ஆயிடினும் அத்திண்மை தானும் நுண்ணியது, நுண்ணியது நல்லன்பின் ஒளிக்கே; நூறுகட்டுக் கட்டிடினும் கீழ்மேலும் எங்கும் கண்ணியது, கண்ணியது; காணவல்ல ததுவே; கடவுளது நன்மரபும், கருமகன் தீமரபும் தண்ணியது தண்ணியதாம் தன்மாயத்தாலே தானிழைத்தொன் றாக்குகின்ற தரமுடைய ததுவே.

2கருதுவது தீமையெனில்

செயலது வேறாமோ?

உருநிழலாம் தீமையதே

உருவாகும், ஐயமில்லை!

கருதுவது நிறைநலமே

- எமர்சன்

ஆமாயின், செயலதுவும்

திருநிறையும் வாய்மையொடு

திளைப்பதுவென்றே தேர்வாய்!

- கன்ஃபூசியஸுக்குப்பின்.

மன்னிப்புப் பண்பின் பயிர்ப்பில் ஓரளவு முன்னேறி விட்ட வனுக்குப் புதிய உணர்வு உதயமாகின்றது. நன்மை தீமைகளின் இயல்பு இப்போது அவனுக்கு விளங்குகிறது. மனித இதயத்தில் கருத்துக்கள், செயல் நோக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன; எவ்வகைகளில் வளர்கின்றன; எங்ஙனம் செயலாக நிறை வுறுகின்றன என்பவற்றை இந்நிலை அடைந்த மனிதன் தெள்ளத் தெளியக் காண்கிறான். புறக்காட்சி கடந்து அகக்காட்சி, பொறிபுலனறிவு கடந்து உள்ளுணர்வு பெறுகிற படி இதுவே.