(180) ||
அப்பாத்துரையம் - 29
அத்தகையவையானால், அவற்றுக்காகக் கழிவிரக்கம் கொள்ள, மன்னிப்பின் மூலம் அவற்றைப் பின்வாங்க இடம் ஏற்படாது. நல்லன, இனியன அல்லவானால் அவற்றை ஏன் முதலில் உள்ளம் மேற்கொள்கிறது? அவை தீயன, இன்றியமையாதன என்ன அப்படியும் கூறவதற்கில்லை. இன்றியமையாதன வானால் அவற்றுக்காக யாராவது கழிவிரக்கம் கொள்வார் களா? முதலில் மேற்கொண்டு பின்பு பின் வாங்குவார்களா?
லாமா?
-
இப் பண்புகள் நல்லன, இனியனவல்ல, தீயன இன்றி யமையாதனவுமல்ல. அவை விலக்க முடியாதனவுமல்ல. இயல் பாகத் தாமாக நிகழ்பவையுமல்ல. அவை அறியாமையின் பயன், ஆனால் இந்த அறியாமையும் இயல்பானதன்று. இயல்பானது என்றும் நீங்காது. இயல்பல்லாதது ஒரு கூறாகக் கருதாமல் இயற்கையின் வேறான தனிப்பொருளாகத் தன்னைக் கருதும் தன்னலத்திலிருந்தே இப் பண்புகள் தோன்றுகின்றன. எனவே அவை இயல்பான தீங்குகளல்ல. தீங்கான போக்கின் விளைவுகள், அதன் அறிகுறிகள் மட்டுமே.
கேள்விகளுக்கு நல்லுணர்வுப்படியிலுள்ள உள்ளம் காணும் மறுமொழி இதுவே.
சீற்றம், கடுகடுப்பு ஆகிய உணர்ச்சிகளை அகற்றுவதே அழகிது, இனிது, அமைதி தருவதானால், பழி எதிர்பழியின் பண்புகளை ஒழிப்பதே மன்னிப்பின் மாண்புடைய இன்பம் அளிக்குமானால்- கோபத்தின் அடிப்படையான தன்முனைப்பு நாடாமல், பழிக்கு அடிப்படையான தீங்கையே தீங்காக நோக்காமல், எதிர் பண்பற்ற இயல்பான அன்பும் பாசமும் மேற்கொண்டால் - அது எவ்வளவு அழகிது, இனிது, அமைதி தருவதாக இராது! சீற்றம் அடக்கும்போதே அமைதியும், உணர்ச்சிகளை அகற்றும்போதே இன்பமும், தன்னலத்தை அகற்றும்போதே ஒளியும் உண்டாகுமானால், நிலையாக இவற்றின் தடமில்லாமல், அன்பும் அமைதியும் இன்பமும் பேணினால் அது எவ்வளவு ஆற்றல் தராது!
உயர்தளச் சிந்தனை, ஒத்துணர்வு
பிறர் உனக்குச் செய்யும் தீங்கு தீமையானால், அதற்காக நீ அவர்களை வெறுப்பதும் தீங்குதானே? ஒரு தீமை இன்னொரு