பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

203

பிறர் விழிவழி அவர்கள் வாழ்வை ஒருவன் மதிப்பிடும் போது, அவன் நன்மை தீமை அறிவின் முதற்படி அடைகிறான். ஏனெனில் நிலவரமான தனி நன்மை தீமை அறிவின் முதற்படி அடைகிறான். ஏனெனில் நிலவரமான தனி நன்மை தீமை எதுவும் புறஉலகில் கிடையாது. ஒரு மனிதனின் நன்மை மற்றவன் தீமையாகலாம்.ஒரு மனிதனின் தீமை மற்றவன் தீமையாகலாம். ஒரு மனிதனின் தீமை மற்றவன் நன்மையாகலாம். ஒவ்வொருவருக்கும் அவரவர் படிக்கேற்ப, பண்பு ஒளிக்கு, அறியாமை இருளுக்கு ஏற்ப, அனுபவத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு வகை நன்மை தீமை வேறுபாடு உண்டு.

எவ்வளவு மோசமான பழியையும் நலம் என்று நினைப்பவர் உண்டு. அதுபோல எவ்வளவு உயர்ந்த பண்பையும் பழியாகக் கருதுபவர் இல்லாமல் இல்லை. ஆகவே அவனவன் படிக்குரிய நன்மையே அவனவன் நன்மை. அதனாலேயே அவன் மதிப் பிடப்படவேண்டும். அவனவன் படிக்குரிய தீமையே அவன் தீமை. அதனாலேயே அவன் கண்டிக்கப்பட முடியும். ஆனால் எவரும் தன் படிக்குரிய நன்மையின்படியே நடப்பர். தன் படிக்குரிய தீமையைப் பின்பற்றுபவர் யாரும் கிடையாது.

இதனால் ஒத்துணர்வுடன் பிறர் படிகண்டு பிறர் செயலை மதிப்பிடுதல் என்பது அவர்கள் தீமை காணாது நன்மை கண்டு, அவர்களிடம் அருளிரக்கம் கொள்வதன்றி வேறு எதுவும் ஆக முடியாது.

தூய்மை கைவந்த மனிதன் பிறரிடம் தீமை காணாதவன் மட்டுமல்ல. தன் கருத்துக்கு அல்லது தன் போக்குக்குப் பிறரைக் கொண்டு வரவும் அவன் முனையமாட்டான். அத்தகைய முயற்சிகள் வலிந்த முயற்சிகள், செயற்கை முயற்சிகள். அவை முயற்சிக்கு ஆளானவர்களுக்கும் நலம் தர மாட்டா. முயற்சி செய்பவனுக்கும் நலந்தர மாட்டா. அவரவர்கள் படியில் நின்றே, அவரவர்கள் அனுபவப் போக்கின்படி, அவரவர்கள் அனுபவ அறிவை விரிவுபடுத்தி அவரவர்கள் முன்னேறவே அவன் உதவுவான். விரிந்த அனுபவ அறிவுதான் ஒருவரை உயர்படிக்கு உயர்த்துமேயன்றி, கருத்து மாறுபாடு உயர்த்தாது. தன் செயலே எவருக்கும் தன்னறிவு தரத்தக்கதாகும்.