பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

பெரியவர் விளக்கம்

209

பெ: ஏன்? தன்னலத்தில் நேர்மையான தன்னலம், பேராவலில் நேர்மையான பேராவல், தீமையில் நேர்மையான தீமை என்றெல்லாம் உண்டா?

நீங்கள் எ.யைத் தீயவர் என்று நினைப்பதற்காக உங்களை நான் தீயவர் என்று கண்டிப்பது தவறு என்பதை நான் ஒத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் நீங்கள் நினைப்பது சரி என்று நீங்கள் உறுதியாய் நம்புகிறீர்கள். மனிதன் என்ற முறையிலும் குடியுரிமையாளன் என்ற முறையிலும் அது உங்கள் கடமை என்று நீங்கள் கருதுகிறீர்கள். என் நிலையில் நின்று நான் பாராமல், உங்கள் நிலையில் நின்று பார்த்தால் உங்களைப் பற்றி நீங்கள் கருதுவது போலவே நானும் கருத முடியும். அது சரியே. ஏனென்றால், வெறுப்பைவிட உயர்ந்த ஒரு முறையை நான் இத்தகைய இடங்களின் பின்பற்றுகிறேன்.

த்

ஆனால், இதே உயர்ந்த முறைதான் எ.யை நீங்கள் வெறுப்பது போலவே வெறுக்க முடியாமல் என்னைத் தடுக்கிறது. அவர் நடத்தை உங்களுக்கோ எனக்கோ எவ்வளவு தவறாக வேண்டுமானாலும் தோற்றலாம். ஆனால் அவருக்கோ, அவர் ஆதரவாளருக்கோ அவ்வாறு தோற்றவில்லை. அத்துடன் எல்லா மனிதரும் தாம் விதைப்பதைத் தாமே அறுப்பவர்கள். அதைச் சரி, தப்பு என்று கூறும் பொறுப்பு அவர்களுக்கே, நமக்கல்ல.

அ: நீங்கள் கூறும் உயர்ந்த முறை எது என்று எனக்கு விளங்கவில்லை.

பெ: அதுதான் அன்புமுறை. பிறரைத் தீயவர் என்று காண்பதை விடப் பிறரிடம் தீமை காண்பதையே ஒழித்துவிடும் முறை அது. அது உளத்துக்கு அமைதி தருவது. பேரின்ப நலம் உடையது.

அ: மக்கள் தீமை செய்வதைக் காணும்போது ஒருவன் கோபப் படாமலிருந்தால், அதுதான் உயர்முறை என்று நீங்கள் கருதுகிறீர்களா?