(222
||--
அப்பாத்துரையம் - 29
ஒவ்வொரு தலைமுறையும் அதை நோக்கியே வளர்கிறது. மலர்ச்சியின் பின்னுள்ள வாழ்வு செடியின் வாழ்வன்று, அடுத்த தலைமுறை சார்ந்தது.
நிலத்தின் அடியில், வித்தினகத்தே முதலில் இருளிடையே வேர்முதலாகத் தடவியே உயிரின் கரு வளர்கிறது. பின் இருள் நிலம் கிழித்து முளை ஒளிநோக்கி மேலே முகிழ்த்துத் தளிர்த்து, தழைத்துக் கிளைத்து, அரும்பாகி மொக்குவிட்டு, இறுதியில் மலர்ச்சி அல்லது முழுவாழ்வு அடைகிறது. அழகிய இம்மலரின் பல்வண்ணத் தோற்றத்துக்கு முற்பட அஃது இலை மேல் லையாக, கிளை மேல் கிளையாக பல்கித் தழைத்தது. ஒவ்வோர் இலையும், கிளையும் வாழ்வின் ஒவ்வொரு துன்பத்தைப் போல்வன.
கிளையின் புதுவடிவாகப் பூங்குலையும், இலையின் புத் துருவாக மலரும் முழு வளர்ச்சியின் இனமலர்ச்சியில் மாறுவது போல, தன்னலப்படி கடந்த பொதுநலப்படியில் இனநலமாகிய அன்பு மலர்ச்சி ஏற்படுகிறது.
செடிவாழ்வின் மலர்ச்சியில் நாம் காணும் எல்லாப் படிகளையும் இவ்வாறு மனித வாழ்விலும் பார்க்கிறோம். அனுபவ அறிவில்லாத அறியாமை நிலையில் முதலில் உயிர் தட்டித் தடவிச் செல்கிறது. தன்னலம், மடமை ஆகிய கருநில இருளில் அது விழைவு சென்றவழிக் குழைந்து செல்கிறது. ஆனால் அனுபவமென்னும் நிலப்பரப்பின் திரைகிழித்து அது விரைவில் இன்பவான் நோக்கி உயர்கிறது. பலவகை மயக்க தயக்க இன்னல்கள் டர்களாக வாழ்வு கிளைத்துத் தழைத்த பின், அறிவின் தளிராக, தூய்மையின் கொழுந்தாக, அழகின் சிரிப்பாக, இன்பாளி அவர்கள் உள்ளத்தில் மலர்கிறது.
உண்மை வானவர் யார், வானுலகம் எது?
நன்மையின் நிறைவும் தூய்மையின் முகடும்தான் இன்பம், தனை வாத எதிர்வாதங்களால் மறுக்கமுயல்பவர், மட்டுப் படுத்திவிட முனைபவர் உண்டு. ஆனால் மனிதர் இயற்கை உணர்ச்சியே இதனை எளிதில் உணர்த்திவிடுவதாய் உள்ளது. அவர்கள் மேலீடான புற உணர்ச்சிகள் கடந்த ஓர் உள்ளுணர்வு இதன் உண்மையை அவர்கட்குத் தெரிவித்துவிடுகிறது.