பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

அப்பாத்துரையம் - 29

முதன் முதலிலே உலக நலனார்வமே அவனுக்கு அக ன்பமும் அமைதியும் தந்துவிடுகிறது. அந்த ஆர்வத்தின் பயனான அகப்பண்பும், சொல்லும் செயலும், வாழ்க்கைப் பண்பும் அவனைச் சுற்றிலும் நலம் பரப்புகிறது. இந்நலம் எல்லையற்று உலகெங்கும் அலை அலையாகப் பரந்து கொண்டேயிருப்பது. அலைகள் ஒவ்வொரு படியிலும் எதிரலை யாக வந்து, பொதுநலவாணன் சூழலையும் வாழ்வையும் அவனறி யாமலே, அவன் எதிர்பாராமலே பேணி வளர்த்துக்கொண் டிருக்கிறது.

வ்வாறு பொதுநலத் தொண்டால் அவன் அடையும் இன்பமும் நலனும், தற்பற்றாளன் இன்பத்தைப் போன்றதும் அன்று, அவன் பொதுநல ஆர்வத்தால் முதலில் பெற்ற இன்ப அமைதியும் அன்று. ஆனால் தற்பற்றாளன் இன்பமோ அவன் எதிர்பார்த்த, அவாவில் கனவுகண்ட இன்பம் மட்டுமே. அதுவும் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. ஒருவேளை நிறைவேறி னாலும் தற்காலிக இன்பமாகவே, துன்பக் கலப்புடையதாகவே இருக்கும். அது உண்மையின்பமாகவும் அமைவதில்லை. பொதுநலவாணன் முதன் முதல் பெறும் அமைதி நலமே இதைக் காட்டிலும் பன்மடங்கு இன்பமளிப்பது. அவன் தொண்டு மூலம் பெறும் இன்பமோ இதைவிட மாபெரிது. ஏனெனில் அது எல்லையற்றது.

பொதுநலவாணனின் இன்பம் அவனையறியாமல், அவன் முயற்சியின்றியே வருவது. அஃது அவனை மட்டுமன்றி அவன் சூழலை, இனத்தை, உலகை அவனுடனே உயர்த்தி, அதில் அவனை அலை எதிர் அலைகளின் மையமாக்கி, அவன் ஆற்றலை வளர்ப்பது.

பொதுநல ஆர்வம் இங்ஙனம் தற்பற்றாளன் கனவு காணாத எல்லையில், கனவு காணாத அளவில் மனித வாழ்வில் இடை யறாது வளரும் பொங்கல் இன்பத்தை, நீடுநிறை இன்பத்தை உண்டு பண்ணுகிறது.

பொதுநலவாணன் வாழ்வின் வெற்றி அவ்வாழ்வுடன் தொடர்புடையவரையெல்லாம் வெற்றியடையச் செய்யும் விசையார்ந்த வெற்றி ஆகும். அது நிலையான வெற்றிமட்டு மன்று,மேன்மேலும் வளர்ந்துகொண்டேயிருப்பது. அது அவன்